தமிழ்நாடு:
- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால் தமிழக கடலோர பகுதிகளில் அதி கனமழை - வானிலை மையம் அறிவிப்பு
- பழனி கோயில் நிர்வாகத்தில் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 4,000 பேருக்கு காலை உணவு - முதலமைச்சர் முக ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக அரசிடம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
- சபரிமலை செல்ல தமிழகத்தில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
- கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
- ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் திடீரென சென்னை உயர் நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளன.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான 13 பேரின் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ. 5 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.
- உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்த வேண்டும் - பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தியா:
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் திறப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
- இந்தோனேசியாவில் ஜி 20 மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவதற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- விமான பயணத்தின் போது முகக்கவசத்தை அணிவது கட்டாயம் அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மண்டல கால பூஜை: சபரி மலை கோயில் நடை திறப்பு - பாதுக்காப்புக்கு 1,250 போலீசார் குவிப்பு
உலகம்:
- பாலி உச்சி மாநாடு நிறைவடைந்தது; இந்தியாவுக்கு ஜி20 தலைவர் பதவி - மோடியிடம் ஒப்படைத்தார் இந்தோனேஷிய அதிபர்
- நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது நாசா
- ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரியனில் பாம்பு ஊர்வது போன்ற காட்சி அடங்கிய வீடியோவை ஆர்பிட்டர் விண்கலம் எடுத்து அனுப்பியுள்ளது.
- 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக, தொழிலதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
- நவம்பர் 29ஆம் தேதி முதல் மீண்டும் ப்ளூ டிக் பெறும் திட்டம் - எலான் மஸ்க் ட்வீட் மூலம் தகவல்
விளையாட்டு:
- உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- நாங்கள் சர்வதேச அணி யாரிடமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என இங்கிலாந்தின் மைக்கேல் வாஹனின் விமர்சனத்திற்கு ஹர்திக் பாண்டியா பதிலடி கொடுத்துள்ளார்.
- ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தினை தக்கவைத்துள்ளார்.
- பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாபரை மீண்டும் அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.