தமிழ்நாடு :



  • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குக்கான மின் கட்டணம் 10% குறைப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  • அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து : தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

  • வங்க கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்

  • திருந்செந்தூர் முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

  • அரசாணை 115ன் கீழ் அமைக்கப்பட்ட குழுவில் ஆய்வு வரம்பு ரத்து : முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு

  • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை திறக்க அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  • 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 

  • தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி குடியரசு தலைவரிடம் திமுக, கூட்டணி கட்சிகள் மனு

  • சென்னையில் வெள்ள பாதிப்புகளை கட்டப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

  • மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை 152 ரத்து செய்ய வேண்டும் என திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • விழுப்புரம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்  16 லட்சத்து 82,587 பேர் இடம்பெற்றுள்ளனர். 52,010 வாக்காளர்கள் நீக்கம்


இந்தியா:



  • கர்நாடகா ஆசிரியர் தகுதித் தேர்வு - 2022க்கான அனுமதி அட்டையில் தேர்வரின் புகைப்படத்துக்குப் பதிலாக சன்னி லியோனின் படம் இடம் பெற்றதையடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் 11,000 கோடி ரூபாயை ஏமாற்றிவிட்டு அதை திருப்பி கொடுக்காமல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். 

  • நில அபகரிப்பு வழக்கில் சிவசேனா மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

  • ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட்டின் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட விக்ரம்-எஸ் ராக்கெட்டை, நவம்பர் 12 மற்றும் 16 க்கு இடையே ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவ உள்ளது.

  • குஜராத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியும், அவரது சகோதரியும் நேருக்குநேர் மோதவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


உலகம்:



  • நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்தனர்.

  • நடுக்கடலில் தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 303 பேர் மீட்டு வியாட்நாம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

  • துருக்கி நாட்டில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • பசி, பஞ்சம்... இலங்கையில் உணவு நெருக்கடி: மனிதாபிமானம் உள்ளவர்கள் உதவுங்கள்: ஐ.நா. சபை

  • அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே உள்ள மேரிலாந்து மாகாணத்தின் துணை நிலை ஆளுநருக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.


விளையாட்டு:



  • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. 

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனை அந்த அணி நிர்வாகம் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 2023 ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடக்க விடமாட்டேன்,  அதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் பட்லர் கூறியுள்ளார்.