தமிழ்நாடு:



  • தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு, வரும் 7ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கனிப்பு 

  • திருவையாறு புறவழிச்சாலை எதிர்த்து நாளை கோட்டாட்ச்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை. இரண்டு நாட்களுக்கு புறவழிச்சாலைக்கான பணிகள் நிறுத்தம்

  • பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு எனப் புகார், கட்டாத வீட்டுக்கு பணம் விடுவித்து மூதாட்டியை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு 
    கட்டாத வீட்டுக்கு பணம் விடுவித்து அதனை எடுத்துக் கொண்டு மூதாட்டி ஏமாற்றப்பட்டதாக புகார்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை1500ஆக உயர்வு, சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • புதுச்சேரியில் மாற்றுத்திறனாளி கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரெங்கசாமி அறிவிப்பு.

  • திருவண்ணாமலையில் தீபத்திருவிழா ஒட்டி கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம், பக்தர்கள் பெரிய தேரை  இழுத்துச் சென்றனர். 


இந்தியா:



  • நாளை நடைபெறுகிறது குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 93 தொகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரம்

  • குஜராத்தில் பா.ஜ.க விற்கு எதிராக பலத்த அலை வீசுகிறது, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கிலாட் பேட்டி


  • 2047க்குள் இந்திய கப்பற்படை முழு சுயசார்பை அடைந்துவிடும், தலைமை தளபதி அட்மிரல் ஹரிக்குமார் நம்பிக்கை. 



  • ஷ்ரத்தா கொலை வழக்கை போலவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை அவரது காதலனே கொலை செய்த மற்றொரு அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. மேற்கு டெல்லியின் திலக் நகரில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த 35 வயது காதலியை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறி ஒருவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.



உலகம்:



  • அமெரிக்க அதிபர் பைடனின் நிபந்தனையை நிராகரித்தார் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதல் தொடரும் என்றும் எச்சரிக்கை

  • சீனாவில் ஒரே நாளில் 33,073 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி, கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் சீனா அரசு


விளையாட்டு:



  • நியூசிலாந்தில் நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் 4 தங்க பதக்கம் வாங்கி அசத்திய தமிழக வீரர், பலுத்தூக்கும் போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெய பாரதி சாதனை 

  • இன்று இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வங்கதேசத்தின் மிர்பூர் மைதானத்தில் இன்று காலை 11.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது.