தமிழ்நாடு: 



  •  போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது - மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

  • மருத்துவ கலந்தாய்வு தாமதம் ஆவதால் இன்ஜியரிங் கவுன்சிலிங் தள்ளிப்போகிறது= உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்

  • சென்னை வர்த்தக மையத்தில் இன்று சர்வதேச குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. 

  • ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகராகலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

  • புழல் மத்திய சிறையில் 40 பெண் கைதிகள் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஊதியம் ஈட்டும் வகையில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

  • கடந்த நிதியாண்டில் தமிழக நாடாளுமன்ற தொகுதிகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 38% செலவே செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • சமத்துவ இந்தியாவை காக்கவேண்டியது மாணவர்களின் பொறுப்பு என சிற்பி திட்டம் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

  • 30,000 காலிப் பணியிடங்களால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய பணியாளர்களை உடனே அமர்த்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

  • சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 23 ஆம் தேதி அதிகபட்சமாக 2.81 லட்சம் பேர் ஒரே நாளில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா:



  • மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் - மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு

  • ஒடிசாவில் அரசு பேருந்தும் திருமண நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

  • ஐந்து வந்தே பாரத் ரயில்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

  • தெருக்களில் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை கைவிட்டுவிட்டு நீதிமன்ற போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். 

  • பூரி ஜெகன்னாதர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின் போது 6 இஸ்லாமிய நாடுகள் மீது குண்டு வீசி தாக்கப்பட்டது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 


உலகம்:



  • கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • உக்ரைன் - ரஷ்யா போரில் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

  • ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் மிகப்பெரிய அணை உடைந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. 

  • பாகிஸ்தானில் கனமழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழப்பு 


விளையாட்டு: 



  • SAFF கால்பந்து போட்டியில் இன்று இந்தியா மற்றும் குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

  • உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் அமெரிக்காவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தியது.

  • 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா, மும்பை மைதானங்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

  • 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முழு அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு ஐசிசியால் வெளியிடப்பட இருக்கிறது.