தமிழ்நாடு :
- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் பட்டப்பகலில் ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை
- மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி பாஜகவினர் எதிர்ப்பு : 6 பேர் கைது
- கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதலமைச்சருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- ஜம்மு - காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
- கல்வி, மருத்துவத்துக்காக செலவு செய்வது இலவசம் இல்லை : முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
- தேசிய கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை - திருவண்ணாமலை ஆட்சியர் எச்சரிக்கை
இந்தியா :
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி 2023 டிசம்பரில் நிறைவடையும் : அயோத்தி அறக்கட்டளை தகவல்
- இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் விரைவில் ஆரம்பம் : பிரதமர் மோடி நம்பிக்கை
- பிச்சை எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் : மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தகவல்
- திருமணமான புதிய தம்பதிகளுக்கு ஆணுறை, மாத்திரை - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு
உலகம் :
- இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி : தென் மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
- வங்கதேசத்தில் ஊதிய உயர்வு கோரி தேயிலை தோட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம்
- சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
விளையாட்டு :
- வெளிநாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு தடை : பிசிசிஐ அறிவிப்பு
- இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் விலை உயர்ந்த Mercedez-Benz SUV GLS AMG 63 காரை வாங்கியுள்ளார்.
- டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ப்ராவோ படைத்து அசத்தியுள்ளார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காயம் காரணமாக பி.வி.சிந்து தற்போது விலகியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்