பிச்சை எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலான திட்டத்தை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.


 






75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நகராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு ‘SMILE-75’ பிச்சை எடுப்பவர்களுக்கான விரிவான மறுவாழ்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி மருத்துவ காப்பீடு வழங்கப்படவுள்ளது.


2025-2026 வரை 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அமைச்சகத்தின் ஸ்மைல் திட்டத்தின் (விளிம்புநிலை தனி நபர்களுக்கான வாழ்வாதாரம் மற்றும் ஆதரவு) ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.


இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "SMILE-75 திட்டத்தின் கீழ், 75 மாநகராட்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து பிச்சையெடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு விரிவான நலன்சார்ந்த நடவடிக்கைகளை எடுக்கப்பட உள்ளது. 


மறுவாழ்வு, மருத்துவ வசதி, ஆலோசனை, விழிப்புணர்வு, கல்வி, திறன் மேம்பாடு, பொருளாதார உதவி மற்றும் பிற அரசு நலத்திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


75 நகராட்சிகளில் பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதே சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீரேந்திர குமாரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கமாகும்.


மார்ச் 2021 இல் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு, "2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். இதில் 2,21,673 ஆண் பிச்சைக்காரர்களும், 1,91,997 பெண் பிச்சைக்காரர்களும் அடங்குவர்.


பராமரிப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு, தங்குமிடங்களில் பணி மையங்களை நிறுவ நிதி உதவி வழங்குவதற்காக 1992-93 முதல் 1997-98 வரை பிச்சைக்காரர் தடுப்புக்கான திட்டத்தை அரசு முன்பு செயல்படுத்தியது. ஆனால் 1998-99இல் இத்திட்டம் நிறுத்தப்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண