தமிழ்நாடு :
- இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்
- சுதந்திர தின கொண்டாட்டம் : கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுதலில் சாதிய பாகுபாடு பார்க்கக்கூடாது
- தொடர் விடுமுறை காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதல்
- தொடர் விடுமுறை காரணமாக சென்னை, திருப்பூர், கோவை நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றதால் பேருந்துகளில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம்
- தொடர் விடுமுறை காரணமாக தனியார் பேருந்துகளில் பன்மடங்கு கட்டணம் வசூல் – பயணிகள் எச்சரிக்கை
- தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்ததால் கடும் நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சர் எச்சரிக்கை
- தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு – சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர், குடியாத்தம், தென்காசி தேர்வு
- அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு
- எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு ரூபாய் 100 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது
- புகழ்பெற்ற அழகர்கோவில் கருப்பண்ணசாமி கோவில் நடைதிறப்பு
இந்தியா :
- வீடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம் : இன்று முதல் நாடு முழுவதும் தொடக்கம்
- வீடு முழுவதும் தேசிய கொடி ஏற்றும் விழா 15-ந் தேதி வரை கொண்டாட்டம்
- நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய கொடி ஏந்தி மக்கள் பேரணி
- நாட்டின் நினைவுச் சின்னங்கள் மூவர்ணக் கொடி வண்ணத்தில் ஜொலிக்கின்றன
- சீன உளவுக்கப்பல் விவகாரம் : இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரவில்லை
- கொசஸ்தலை ஆற்றின் அருகே 2 புதிய அணைகள் கட்ட ஆந்திர அரசு ஒப்புதல் – தமிழ்நாட்டிற்கு நீர்வரத்து குறையும் என்பதால் எதிர்க்க விவசாயிகள் திட்டம்
உலகம் :
- இலங்கை எல்லைக்குள் சீன உளவுக்கப்பல் வரவில்லை
- அமெரிக்காவில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து
- சல்மான் ருஷ்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
- தென்கிழக்கு ஐரோப்பிய நாட்டில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் படுகொலை
விளையாட்டு :
- நியூசிலாந்து அணியில் ஜோக் சொல்வது போல இனவெறி கருத்துக்கள் இருந்தது – முன்னாள் வீரர் டெய்லர்
- ஜிம்பாப்வே ஒருநாள் தொடருக்கும் வி.வி.எஸ். லட்சுமணனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்