சமூக வலைதளங்களில் பொதுவாக சிலர் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் தொடர்பாக பகிர்ந்து வருவது வழக்கம். அந்தவகையில் பெண் ஒருவர் தனக்கு நடந்த அனுபவம் தொடர்பாக பகிர்ந்து இருந்தார். அதற்கு ஒரு ஆண் பதில் பதிவு செய்திருந்தார். அவர் செய்திருந்த பதில் பதிவு பேசுப் பொருளாக மாறியது. அப்படி அவர் செய்த பதில் பதிவு என்ன?


 


ட்விட்டர் தளத்தில் பெண் ஒருவர் தனக்கு தெற்கு டெல்லியில் நடந்த அனுபவம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர் தனியாக ஒரு கஃபே கடைக்கு சென்றபோது இரண்டு நபர்கள் அவரை தாக்கியதாக கூறியிருந்தார். மேலும் அவர் ஒரு பூங்காவிற்கு தனியாக சென்று கொண்டிருந்த போது ஒருவர் வலு கட்டாயமாக அவருக்கு தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும் பெண்கள் இது போன்று பொது இடங்களுக்கு தனியாக செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டுமா? என்ற கேள்வியையும் அந்தப் பதிவில் எழுப்பியிருந்தார். 


 






இதற்கு ஒரு ஆண் நபர் பதில் பதிவு செய்திருந்தார். அதில், “நீங்கள் இரவு நேரங்களில் தனியாக சாலையில் நடமாடாமல் தெரியாத இடத்திற்கு செல்லாமல் பத்திரமாக இருங்கள்.உங்களுடைய பாதுகாப்பை நாங்கள் விரும்புகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த அறிவுரை கலந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


 






அவரின் நபரின் இந்த கருத்திற்கு பெண் ஒருவர் தன்னுடைய பதிவை செய்திருந்தார். அதில், “அவர் இந்தியாவில் தான் வசித்து வருகிறார். அவர் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்க தேவையில்லை. அப்படி அவர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆண்களை சாலையில் நடமாட அனுமதிக்காதீர்கள். அப்போது பெண்கள் அனைவரும் பொது இடங்களில் பாதுகாப்பாக உணர்வோம்” எனத் தெரிவித்திருந்தார். 


 






இவரை மேலும் பலரும் அந்த நபரின் பதிவை விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். இதன்காரணமாக இந்தப் பதிவு பேசுப்பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண