தமிழ்நாடு :

  • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த வேண்டும் – அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • திருவிழா, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அனைவரையும் பரிசோதிக்க உத்தரவு
  • சனாதன தர்மத்தினால் உருவானது பாரதம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
  • சனாதன தர்மம் பற்றி பேசிய ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்
  • லாட்டரி சீட்டு விற்பனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
  • தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான வேலை நேரம் – தலைமை ஆசிரியர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
  • அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் அநாகரீகமாக நடந்து கொண்ட கல்லூரி சேர்மன் கைது
  • ஈரோட்டில் கருமுட்டை விற்பனை விவகாரம் – 7 மருத்துவமனைகளுக்கு சம்மன்
  • கருமுட்டை தானத்தை ஒழுங்குபடுத்த குழு அமைத்தது தமிழக அரசு
  • தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

இந்தியா :

  • குடியரசுத் தலைவர் தேர்தல்: 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம்
  • குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் – மம்தா பானர்ஜி
  • நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: நுபுர்ஷர்மாவுக்கு மேலும் ஒரு சம்மன்
  • ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வன்முறை – 144 தடை உத்தரவு அமல்
  • நுபுர் ஷர்மாவை கைது செய்ய வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக உத்தரபிரதேசத்தில் 237 பேர் கைது
  • மும்பையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை
  • கேரளாவில் மாநில அரசு அடிபணிய மாட்டோம் – முதல்வர் பினராயி விஜயன்

உலகம் :

  • எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் தனியார் பேருந்து சேவை முடங்கும் அபாயம்
  • மலேசியாவில் மரண தண்டனைகளை ரத்து செய்து அந்த நாட்டு அரசு உத்தரவு

விளையாட்டு :

  • ஐ.பி.எல். ஒளிபரப்பு ஏல உரிமை இன்று நடைபெறுகிறது – 50 ஆயிரம் கோடி வரை ஏலத்திற்கு செல்ல வாய்ப்பு
  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா இன்று மோதல்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண