தமிழ்நாடு:



  • ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் ஸ்டாலின் - அரசியலமைப்பிற்கு எதிராக செயல்படுவதாக சாடல்

  • ஆளுநர் தொடர்பாக குடியரசுதலைவருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியது திசை திருப்பும் முயற்சி - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

  • பத்திரப்பதிவு தொடர்புடைய சேவைக்கட்டணம் இன்று முதல் அமல் - 20 சேவைகளுக்கான கட்டணங்கள் திருத்தி அமைப்பு 

  • மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது - பாஜக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் சாடல்

  • பாஜக கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருகிறார் - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விளக்கம்

  • அரசு மருத்துவமனைகளில் உள்ள 1,021 மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்படுவர் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

  • செங்கல்பட்டில் பாமக நிர்வாகி வெட்டிக் கொலை - தப்பியோடிய நபரை சுட்டுப் பிடித்த போலீசார் 


இந்தியா:



  • ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் - நாடு முழுவதும் மாநில தலைநகரங்களில் 12ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு

  • 41 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை - அண்டை மாநிலங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில் டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள்  திட்டமிட்டதற்கு முன்னரே முடிக்கப்படும் - ராமஜென்மபூமி அறக்கட்டளை தகவல்

  • அந்தமான் தீவுகளில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - நள்ளிரவில் பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்

  • பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பி. சோனி கைது - வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி

  • மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் வன்முறை - 6000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு


உலகம்:



  • நேட்டோ உச்சி மாநாட்டை முன்னிட்டு இங்கிலாந்து சென்றுள்ள அதிபர் ஜோ பைடன் - உக்ரைன் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை

  • ஹாங்காங், ஜெருசலேமை  சேர்ந்தவர்கள் உட்பட 21 பேர் கத்தோலிக்க சபைக்கு புதிய கர்தினல்கள் - போப் ஆண்டவர் அறிவிப்பு

  • கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் - தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றவர்கள் கைது

  • ஜப்பானில் கனமழை காரணமாக ரயில் சேவைகள் முடக்கம்

  • உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்க அமெரிக்கா முடிவு - இயலாமையின் வெளிப்பாடு என ரஷ்யா விமர்சனம்

  • பாகிஸ்தானனில் வேன் திப்பிடித்து  எரிந்து 7 பேர் உடல் கருகி பலி


விளையாட்டு:



  • விம்பிள்டன் தொடரில் ஆண்ட்ரே ரூப்லேவ், ஜானிக் சின்னர் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அசரென்கா அதிர்ச்சி தோல்வி - 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா வெற்றி

  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆஷஷ் டெஸ்ட் தொடர் - முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அணி

  • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் - இந்தியாவின் பிரியன்ஷ், அதிதி தங்கம் வென்று அசத்தல்

  • டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி - திண்டுக்கல் மற்றும் நெல்லை அணிகள் இன்று பலப்பரீட்சை