Tomato Bouncer: தக்காளிக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், வியாபாரி ஒருவர் அவரது கடை முன் பவுன்சர்களை நிற்க வைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தக்காளி விலை உயர்வு


நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்து வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. சில தக்காளி பயிரிடும் பகுதிகளில் கனமழை மற்றும் ஜூன் மாதத்தில் இயல்பை விட அதிக வெப்பம் பயிர் உற்பத்தியை பாதித்தது. இதனால் இந்த ஆண்டு விலை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை உயர்ந்தாலும், இந்த ஆண்டு விலை உயர்வு அபரிமிதமாக உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 


கடந்த 3 மாதத்திற்கு முன்பு, ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தற்போதோ தக்காளி விலை விறுவிறுவென உயர்ந்து கிலோ 150 ரூபாயை எல்லாம் தாண்டியது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளி விலை உயர்வு ஓட்டல்களையும் பாதித்துள்ளது. பல ஓட்டல்களில் தக்காளி சட்டினியை நிறுத்தி விட்டனர்.


சாலையோர உணவகங்களில் தக்காளி சட்டியை கண்ணில் காட்டுவது கூடும் இல்லை. வீடுகளில் கிலோ கணக்கில் வாங்கிய மக்கள் கூட தற்போது கால் கிலோ என குறைவாக வாங்க தொடங்கி விட்டனர். இதனை அடுத்து, தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேசன் கடைகளில் தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


தக்காளிக்கு பவுன்சர் பாதுகாப்பு


இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.   தக்காளி வாங்கு வரும் மக்கள் தன்னிடம் பேரம் பேசுவதாகவும், தக்காளியை சிலர் திருடி செல்வதாலும் இரண்டு பவுன்சர்களை நிறுத்தி உள்ளதாக வியாபாரி அஜய் ஃபௌஜி தெரிவித்தார்.






மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”தக்காளி விலை தற்போது அதிகமாக இருக்கிறது. தக்காளி விலை தற்போது கிலோ 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் கால் கிலோவுக்கு குறைவாகவே தக்காளி வாங்குகின்றனர். எனவே,  தன்னுடைய கடைக்கு தக்காளி வாங்கும் வரும் நபர்கள் தன்னிடம் பேரம் பேசி சண்டையில் ஈடுபடுகின்றனர். சிலர் தக்காளியை திருடியும் செல்கின்றனர். இதனால் தனது கடை முன்பு இரண்டு பவுன்சர்களை நிறுத்தி உள்ளதாக" அவர் தெரிவித்தார்.