தமிழ்நாடு:



  • ஹிந்தி என்ற ஒரே மொழியை திணிக்கிறது; பிற மொழிகளை அழிக்கப்பார்க்கிறது பாஜக - முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

  • புகையிலைப் பொருட்களான பான்மசாலா, குட்காவுக்கான தடை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல் ஆதரவு

  • குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாசு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

  • தொடக்க கல்வித்துறை சார்பில் ரூ.240 கோடி மதிப்பில் பள்ளி கட்டுமான பணிகள் : முதலமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • “இளைஞர்கள் வாக்களிப்பவராக மட்டும் இல்லாமல் வேட்பாளர்களாக மாறுங்கள்”- மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர்

  • என்.எல்.சி நிறுவனத்திற்காக விவசாயிகளின் விளை நிலங்கள் அச்சுறுத்தி பறிக்கப்படுவதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்தியா:



  • மத்திய அரசின் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது - குடியரசு தலைவர் முர்மு நாட்டு மக்களுக்கு உரை

  • மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் ரத்து

  • தலைமை நீதிபதி பரிந்துரையின் படி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் : இன்று வெளியாகிறது. 

  • 901 பேருக்கு வீரதீர செயல்களுக்கான காவல்துறை விருது - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

  • அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா எகிப்து இடையே ரூ.77 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் : பிரதமர் மோடி உறுதி

  • பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான, அதானி மொத்த ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் ரூ.96 ஆயிரத்து 672 கோடியை இழந்துள்ளார்.

  • நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஜனவரி 27-ல் நடைபெறுகிறது.

  • லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு: மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு பிணை


விளையாட்டு:



  • 2022 ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் பெண்களுக்கான அணி வெளியிடப்பட்டுள்ளது.

  • சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 2022ம் ஆண்டிற்கான, வளர்ந்து வரும் வீராங்கனை எனும் விருதை இந்தியாவின் ரேணுகா சிங் பெற்றுள்ளார்.

  • 2022ஆம் ஆண்டுக்கு சிறந்த டி-20 வீரர் சூர்யகுமார் யாதவ் என ஐசிசி அறிவித்துள்ளது.

  • ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா - போபண்ணா ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக வாஷிங்டன் சுந்தர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

  • மகளிருக்கான ஐபிஎல் தொடர், மகளிர் பிரீமியர் லீக் என அழைக்கப்படும் என்று, இந்திய கிரிக்கெட் சம்மேளனத்தின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.


உலகம்:



  • உலகம் முழுவதும் மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியது.

  • உக்ரைன் போரில் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ உதவி ஊழியர்கள் 2 பேர் உயிரிழப்பு.

  • பிலிப்பைன்சில் ராணுவ விமானம் வயலில் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி

  • நியூசிலாந்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் நேற்று பதவியேற்றார்