• காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ நெருங்கியது.விமான நிலையம் அருகே நிகழ்ந்த இருவேறு குண்டுவெடிப்புகளில் 170 ஆப்கான் பொதுமக்களும் 13 அமெரிக்க படையினரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்கப் படையினருக்கு உதவியவர்களை தண்டிக்கவே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 

  • நாடு முழுவதும் ஒரே நாளில் ஒருகோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரு கோடிப் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஒருகோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியது கொண்டாடப்பட வேண்டிய தருணம் என்றும் இந்த இயக்கத்தை வெற்றியாக்கியவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். 

  • கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.நாட்டிலேயே  கேரளாவில்தான் தொடர்ச்சியாக அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் கேரள அரசுக்குக் கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் கண்காணிப்பினைத் தீவிரப்படுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். 

  • கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடைகேட்ட வழக்கில் கூடுதல் விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதி நிர்மல் குமார் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது. வழக்கு எந்த நிலையில் இருந்தாலும் அதனை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என நீதிமன்றம் கூறியுள்ளது.மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

  • கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் மீதான கூடுதல் விசாரணை நேற்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியில் இருக்கும் சயான் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கில் முக்கியத் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை வருகின்ற செப்டம்பர் 2ந் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

     
    இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 432 ரண்கள் எடுத்தது இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய 2 விக்கெட் இழந்த நிலையில் தற்போது வரை 215 ரன்கள் எடுத்துள்ளது. 

  • டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குஜராத்தின் பவினா பென் படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டி நாளை இந்திய நேரப்படி நாளை காலை 7:15 மணிக்கு நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டியில் பவினா பென் சீனாவின் ஜூ-இன் என்பவரை எதிர்த்து விளையாடவிருக்கிறார்.