தமிழ்நாடு :



  • நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதலை கேட்கவில்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

  • பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நிறைவேற்றும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

  • சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பண் மரியாதைக்குறைவாக நடந்து கொண்டதாக அ.தி.மு.க. வெளிநடப்பு

  • துணைவேந்தர் நியமன மசோதாவை கண்டித்து பா.ஜ.க. வெளிநடப்பு

  • பல்கலைகழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வரை நியமிக்க வேண்டும் – அமைச்சர் பொன்முடி

  • புதிய தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் – துணைவேந்தர் மாநாட்டில் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

  • துணைவேந்தர் மசோதா அரசியல் காழ்ப்புணர்ச்சி போன்றது – தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

  • ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 78 ஆக உயர்வு

  • தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு – 6 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக பதிவு

  • வத்தலகுண்டில் கடத்தப்பட்ட ஹோட்டல் அதிபர் 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

  • வேலூரில் மேசையை உடைத்த 10 மாணவர்கள் இடைநீக்கம்


இந்தியா :



  • பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நடைமுறையில் மாற்றத்தை அறிவித்தது மத்திய அரசு

  • பாதுகாப்பு உபகரணங்கள் விவகாரங்களில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு முடிவு

  • மக்களவைத் தேர்தலுக்காக குழு அமைக்கும் காங்கிரஸ் – ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் மே மாதம் ஆலோசனைக்கூட்டம் நடத்த முடிவு

  • இந்தியாவில் 16 யூ டியூப் சேனல்களை முடக்கியது மத்திய அரசு – தேசப்பாதுகாப்பு நடவடிக்கை என தகவல்

  • மே 4-ந் தேதி எல்.ஐ.சி. பங்கு வெளியீடு நடைபெறும் என்று தகவல்


உலகம் :



  • பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான்மஸ்க் ஒப்பந்தம்

  • பங்குச்சந்தையில் இருந்து நீக்கப்பட்டு தனிநபர் நிறுவனமாக ட்விட்டர் மாறுகிறது

  • கருத்துச் சுதந்திரமே ஜனநாயகத்தின் அடிப்படை. அதைக் காப்போம் என்று எலான்மஸ்க் ட்விட்

  • மோசமாக விமர்சிப்பவர்களும் ட்விட்டரில் இருக்க வேண்டும் – எலான் மஸ்க்

  • மூன்றாம் உலகப்போர் ஏற்படும் அபாயம் உண்மையிலே உள்ளது – ரஷ்ய வெளியுறவுத்துறை

  • உக்ரைனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் - ரஷ்யா


விளையாட்டு :



  • ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி தோல்வி

  • 16 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்ந்தது

  • பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வியால் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு மங்கியது

  • ஐ.பி.எல். போட்டியில் இன்று பெங்களூர் – ராஜஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண