இந்தியா:


18 வயசுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டம்- சில நாடுகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் பூஸ்டர் டோஸ் திட்டத்தை யோசிக்கிறது மத்திய அரசு


உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பொறுப்பேற்பார் என பாஜக அறிவிப்பு


கோவா முதல்வராக பிரமோத் சாவத் தேர்வு -பாஜக


உக்ரைன் விவகாரம் தொடர்பாக இந்திய - ஆஸ்திரேலிய பிரதமர்கள் காணொலியில் பேச்சுவார்த்தை


புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி திவீரம் - 44% வேலை முடிந்துள்ளதாக மத்திய அரசு தகவல்


திருப்பதி ஏழுமலையான் கோவிலின் ஏப்ரம் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட் 1 மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது - மொத்தம் 8லட்சத்துக்கு 40 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை.




தமிழ்நாடு:


137 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூபாய் 102.16க்கு விற்பனையாகிறது. டீசல் ஒரு லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, 92.19 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 
மேகதாது அணை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் - அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு


ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றும் ஆஜராகும் ஓபிஎஸ் - நேற்று 78 கேள்விகளுக்கு பதில் அளித்ததாக தகவல்


பைக்குகளில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது - பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


6 முதல் 9 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி - மைதானங்களில் நடத்திட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்க தமிழக அரசு முடிவு - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்


சென்னையில் களைகட்டிய நம்ம ஊர் திருவிழா - 400க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று கொண்டாட்டம் - 30க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றம்




உலகம்:


சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.


சீனாவின் குவாங்க்ஸி பகுதியில் பயணிகள் விமானம், விபத்துக்குள்ளான நிகழ்வை ஒட்டி, பல்வேறு தரப்பினரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவுடன் தூதரக உறவை முறிப்போம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. புதின் குறித்து பைடன் பேசிய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது என கண்டனம்


 விளையாட்டு:


சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் விலகல் -  உடல் சோர்வு காரணமாக விளையாடவில்லை எனத் தகவல்


நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் பக்ரைன்-இந்திய அணிகள் நாளை மோதுகின்றன.