- ஆஃப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சி அமைப்பது தொடர்பாக தலிபான்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தலிபான் அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளரான அப்துல் கனி பர்தார் இந்த பேச்சு வார்த்தையை முன்நின்று நடத்திவருகிறார். அடுத்த ஆஃப்கன் அதிபராக இவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமையேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஃப்கானிஸ்தானில் இருபாலர் கல்விக்குத் தடை விதித்தது தலிபான் அமைப்பு. சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு இருபாலர் கல்விதான் காரணம் எனக் கூறித் தலிபான் அமைப்பு தடைவிதித்துள்ளது.
- இந்தியாவில் தலிபான்களுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டதாகக் கூறி இதுவரை 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் தலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக உத்திரபிரதேச எம்.பி. மீது இதுதொடர்பாக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் நேற்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டள்ளது.இந்தப் பெரும் நிலச்சரிவிலிருந்து பொதுமக்களுடன் சென்ற பேருந்து ஒன்று நூலிழையில் தப்பித்தது. ஓட்டுநரின் சாதுரியத்தால் பேருந்தில் இருந்த 14 பேரும் உயிர்தப்பினர்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சை விவகாரத்தின்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் கல்யாண் சிங்.- செப்.1ல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திட்டமிட்டபடி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்.நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் 23-ந் தேதி (நாளை) முதல் இயங்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை முதல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
- ஆபாச யூட்யூபர் பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்(Advisory committee).மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஜூலையில் உத்தரவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரகத்தின் அறிவுரைக் கழகத்தில் தன் மீதான குண்டர் சட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படிக் கேட்டுக்கொண்டார் பப்ஜி மதன். மறுபரிசீலனை செய்து தற்போது குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
- சென்னைக்கு வயது 382. சென்னை பெருநகர மாநகராட்சி இன்று மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடுகிறது
- எரிபொருள்களான பெட்ரோல் டீசல் இரண்டுமே விலை குறைந்துள்ளது. சென்னையில் 0.15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.32க்கு விற்பனை செய்யப்படுகிறது. எட்டு நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லிட்டர் டீசல், 0.18 காசுகள் குறைந்து ரூ.93.66க்கு விற்பனையாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Headlines Today, 22 Aug: மெட்ராஸ் டே..தியேட்டர்கள் திறப்பு..சரிந்த பெட்ரோல் டீசல் ..இன்னும் பல!
ஐஷ்வர்யா சுதா
Updated at:
22 Aug 2021 07:32 AM (IST)
Headlines Today, 22 Aug: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
சென்னை தினம்
NEXT
PREV
Published at:
22 Aug 2021 07:32 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -