* மத்திய அரசை கண்டித்து செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30 வரை நாடு தழுவிய போராட்டம். சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு.


* கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே இன்று ஓணம் கொண்டாட்டப்படுகிறது. புத்தாடை அணிந்து, பூ கோலமிட்டு அம்மாநில மக்கள் உற்சாகமாக உள்ளனர்.


* பயங்கரவாத மற்றும் அழிவு சக்திகள் சில நேரங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் அவை நிரந்தரமானதாக இருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


* வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளார்.


* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,668 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,97,603 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 199 பேரும், சென்னையில் 185 பேரும், ஈரோட்டில் 158 பேரும், தஞ்சாவூரில் 102 பேரும் சேலத்தில் 98 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


* உலகின் முதல் டிஎன்ஏ அடிப்படையிலான 'சைகோவ்-டி' என்ற கொரோனா தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்காக மத்திய மருந்துகள் தரகட்டுப்பாட்டு ஆணையத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சைகோவ்-டி (ZyCoV-D) எனப்படும் இந்த பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பு மருந்து சைடஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைத்து, தயாரிக்கப்பட்டது. 


* தமிழ்நாட்டில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்தும், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தியேட்டர்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.


* புளியந்தோப்பு குடியிருப்பு கட்டடம் சிதலமடைந்த விவகாரத்தில் 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாட் அரசு உத்தரவிட்டுள்ளது.


* மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் ஓபிசி இடஒதுக்கீடு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.


* வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.5 லட்சம் டன் நிலக்கரி மாயமாகியுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். 


* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.


* தமிழ்நாட்டில் 60 கிராமங்களில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


* பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரஃபேல் நடால் விலகியுள்ளார். காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் எந்த போட்டிகளிலும் பங்கேற்கபோவதில்லை என்றும் நடால் அறிவித்துள்ளார்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற