தமிழ்நாடு:
* அதிமுக உட்கட்சி தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
* “அரசு வழிகாட்டுதலின்படி பொது இடங்களில் மக்கள் நடந்துகொண்டால் ஊரடங்கிற்கு அவசியமில்லை” - மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.
* சென்னையில் கடந்த நவம்பர் மாதம் 30 நாட்களில் 23 நாட்கள் மழை மட்டுமே பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
* நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட இன்னசன்ட் திவ்யா தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை.
* பாலியல் குற்றங்களில் ஊடகங்களின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்கிறது - நீதிமன்றம்
இந்தியா:
* இந்தியாவில் இருவருக்கு உறுதியானது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று என்பதை மத்திய சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது
* மலைப்பாதை சீரமைப்பு செய்யப்படும்வரை யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என திருப்பதி கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
* இந்திராகாந்தியை போல மோடியையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
* அணைகள் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
உலகம்:
* கடந்த 1996 ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பார்படாஸ் தீவு தற்போது தான் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* வருகின்ற 4 டிசம்பர் 2021 அன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ இருக்கிறது. இது முழு சூரிய கிரகணம் என்பது குறிப்பிடத்தக்கது.
* “எனக்கு அதிர்ச்சியா இருந்தது...” ஓமிக்ரான் வகை கொரோனாவை கண்டுபிடித்த மருத்துவர் அதிர்ச்சி தகவல்
* இந்தியா உட்பட உலகின் 30 நாடுகளில் புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விளையாட்டு:
* இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று காலை தொடங்குகிறது. கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.
* சென்னை அணியின் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பாக அந்த அணியின் சிஇஒ காசி விஸ்வநாதன் பேசியுள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்