தமிழ்நாடு:


* தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 718 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,492 ஆக அதிகரித்துள்ளது. 


* சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராக வேண்டும், இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பம் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


* டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.


* செம்மஞ்சேரி பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர்  பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களிடம் தேவைப்படும் உதவிகளை கேட்டறிந்தார்.  


இந்தியா: 


* மாநிலங்களவை நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டன. 


* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  8,954 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.10,207பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.29 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவு.


* இன்று எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலகம் : 


* பிறந்தநாள் அன்று மட்டும் யூட்யூப் தளத்தில் `நான் இன்னும் சாகவில்லை’ என்று பதிவுசெய்து, அதன்மூலம் பிரபலமான யூட்யூப் பிரபலம் ஒருவர் தனது 57-வது வயதில் உயிரிழந்துள்ளார்.


* பிரிட்டனின் பன்பெரி பகுதியைச் சேர்ந்தவர் பிரிங்கில் என்ற 63 வயது நபர், 22 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


* வரப்போகும் சூரியக் கிரகணம் 4 மணி நேரம் 8 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி சூரியக் கிரகணம் டிசம்பர் 4ம் தேதி  காலை 10.59க்கு தொடங்கவுள்ளது.  இந்த மொத்த சூரியக் கிரகணம் மதியம் 12.30 மணிக்கு முடிவடைகிறது. 


விளையாட்டு:


* ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் பெல்ஜியத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. 


* பேட்மிண்டன் உலக டூர் ஃபைனல்ஸ் தொடரை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஶ்ரீகாந்த் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொட


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடியூபில் வீடியோக்களை காண