* 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம்- டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றுகிறார்.


* நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து வருகிறார்கள். பெண்களின் இந்த வெற்றி, வருங்கால வளர்ச்சி அடைந்த இந்தியாவின் ஒரு காட்சியை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது - 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை


* முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் நெல் கொள்முதல் உயர்வு, கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


* பட்டியலின வுகுப்பினரை தரக்குறைவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.       


* அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 24 பேர் உள்பட 208 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


* தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெறுவது கட்டாயம் என்று தமிழ்நாடு வேளான் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


* வேளாண்மை பெருமையை இளம் சந்ததியினர் அறிய சென்னையில் ரூ.2 கோடியில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,750ல் இருந்து ரூ.2,900ஆக உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


* பட்ஜெட்டில் வரி குறைப்பு நடவடிக்கையால் தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டது அமலானது.


* கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக தான் கருதுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


* சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் அதிகாரிகளுக்கு பதக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


* தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் 219 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரேநாளில் 34 பேர் உயிரிழந்த நிலையில், 1,866 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


* ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 227 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


* லார்ட்ஸ் டெஸ்ட்டில் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஜோ ரூட் 180* ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.