தமிழ்நாடு :


தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழர் திருநாளான பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. உற்சாகத்துடன் பொங்கல் பொங்கும் மக்கள்


தைப்பொங்கலை அடுத்து அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு 


தமிழ்நாட்டில் தினம் தினம் அதிகரிக்கும் கொரோனா - நேற்று ஒரே நாளில் 20911 பேர் பாதிப்பு - சென்னையில் மட்டும் 8ஆயிரத்தை தாண்டியது பாதிப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு துணையாக தமிழக அரசு நிற்கும் - ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி


இனி முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரூ.500 - தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை - இரவில் நடந்து வரும் சாலைப்பணிகளை திடீரென ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின் 


தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்தது கேரளா -  பொங்கல் விடுமுறை அளிக்க வேண்டுமென நேற்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த நிலையில் கேரள முதல்வர் நடவடிக்கை


இந்தியா:


கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரிவுப்படுத்துங்கள்; பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருங்கள் - பிரதமர் மோடி


மேற்கு வங்கத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து -  6 பேர் பலி - பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவிப்பு


உபியில் அரசியல் நெருக்கடி - எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகுவதால் பாஜகவுக்கு நெருக்கடி


சூடுபிடிக்கும் உபி தேர்தல் - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்; 40% பெண்களுக்கு வாய்ப்பு


சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் - பக்தர்கள் வழிபாடு


விளையாட்டு:


தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா வெற்றி பெற 212 ரன்கள் இலக்கு; 101/2 என்ற நிலையில் மூன்றாம் நாள் நேற்று முடிந்த நிலையில் எதிர்பார்ப்புகளுடன் இன்று நான்காம் நாள்


இந்திய ஓபன் பேட்மிண்டன்: முன்னணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் !


உலகம்:


ஜெர்மனியில் கொரோனா உச்சத்தில் பரவும் கொரோனா - 81,417 பேருக்கு பாதிப்பு


தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா - முக்கிய அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்