* தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
* முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களின் மகனும், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுக தேர்தல் பணிக்குழு மாநிலச் செயலாளர்களில் ஒருவருமான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
* ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் நவம்பர் ஒன்றாம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
* சில பல அரசியல் காரணங்களுக்காக கடந்த சட்டமன்ற தேர்தலில் 1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதை இந்த உள்ளாட்சி தேர்தலில் மீட்டு அதிமுகவை அசைக்க முடியாது என்ற நிலையை உறுவாக்குவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
* தமிழ்நாட்டில் நேற்று 1578 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
1,51,855மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,578 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 188 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 24 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35627 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 17046 பேர் உள்ளனர். 12 வயதுக்குட்பட்ட 94 சிறார்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
* போக்சோ, லஞ்ச வழக்கில் சஸ்பெண்டாகும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்று மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
* இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு பெயர் எடுக்க பாடுபடுவோம் என்று மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
* வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
* ஷார்ஜாவின் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணியின் ப்ளே ஆப் சுற்று கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
* மற்றொரு போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.