News Headlines: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... உலககோப்பையில் இந்தியா வெளியேற்றம் - சில தலைப்புச்செய்திகள்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

Continues below advertisement
  • சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட்ட முதல்வர் – சீரமைப்பு பணிகளை உடனடியாக துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு
  • சென்னையில் திடீரென சாலைகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் வெளியூர்களில் இருந்து திரும்புவோர் பயணத்தை ஒத்திவைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
  • சென்னையில் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு
  • சென்னையின் தாழ்வான பகுதிகளில் இன்னும் வடியாத மழைநீர் – மழைநீரை அகற்ற முடியாமல் ஊழியர்கள் அவதி
  • தேசிய பேரிடர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்- பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
  • தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்பிற்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மத்திய அரசு வழங்கும் – பிரதமர் மோடி மு.க.ஸ்டாலினிடம் உறுதி
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் திறப்பு – குன்றத்தூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
  • சென்னையில் 5 இடங்களில் சுரங்கப்பாதைகளை மூழ்கடித்த மழைநீர் – பொதுமக்கள் பயணிக்க தடை
  • தொடர் கனமழை காரணமாக சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை – தமிழக அரசு உத்தரவு
  • சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களும் விடுமுறை அளிக்கவும், வீட்டில் இருந்தே பணிபுரியவும் அனுமதிக்க அரசு பரிந்துரை
  • தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
  • திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகள், வைர கம்மல் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை
  • முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்
  • முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்த படத்தை வெளியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
  • வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் கடலுக்குள் சென்று மீனவர்களை கரை திரும்ப எச்சரித்த கடலோர காவல்படை
  • உலககோப்பை டி20 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது நியூசிலாந்து
  • நியூசிலாந்து அணி வெற்றியால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கலைந்தது
  • உலககோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Continues below advertisement

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola