• தமிழ்நாடு முழுவதும் வரும் 12-ந் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • இந்த ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

  • ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்த 11 மாவட்டங்களிலும் வரும் 5-ந் தேதி முதல் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.

  • ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

  • திருமண நிகழ்வுகளில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • இறுதிச் சடங்குகளில் 20 நபர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

  • மாநிலத்தில் ஏற்கனவே 7 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் தற்போது 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • உணவகங்கள், தேநீர் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

  • அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படும்.

  • எம்.பில், பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி பணிகளை மேற்கொள்ள கல்லூரிகள், பல்கலைகழகங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் / இ-பதிவு முறை ரத்து செய்யப்படுகிறது.

  • கடைகளின் நுழைவுவாயில் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்யவேண்டும்.

  • வாடிக்கையாளர்கள் மற்றும் கடைகளில் பணிபுரிவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

  • ஏ.டி.எம். நூதன கொள்ளை கும்பல் தலைவனிடம் போலீசார் தீவிர விசாரணை

  • அனைத்து வகை பருப்புகளின் இருப்புக்கு கட்டுப்பாடு – விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19-ந் தேதி தொடக்கம் – 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

  • உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத்சிங் ராவத் திடீர் ராஜினாமா – புதிய முதல்வர் இன்று தேர்வு

  • தமிழ்நாட்டில் நேற்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு.

  • மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 952 பேர் குணம் அடைந்தனர்.

  • தமிழ்நாடு முழுவதும் நேற்று மட்டும் கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழப்பு

  • ராணுவ படைகளை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி – தலைமைத் தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை

  • கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி - தடுப்பூசி மூலம் தாய் மற்றும் குழந்தைக்கு பாதுகாப்பு என மத்திய அரசு விளக்கம்

  • கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரளா, ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மத்திய குழு நேரில் சென்று ஆய்வு

  • ஒடிசா அகழாய்வில் 4 ஆயிரம் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு - வீடுகள் இருந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு