- டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது
- முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து
- கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியானது
- முதல் முறையாக தசம விகித அடிப்படையில் மதிப்பெண்கள் வெளியீடு
- 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 22-ந் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் –பள்ளிக்கல்வித்துறை தகவல்
- காவிரி- குண்டாறு திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு – அணையின் நீர்மட்டம் 73 அடியாக உயர்வு
- மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிப்பு – விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உயர்வு
- இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 41 கோடியாக உயர்வு
- தமிழ்நாட்டிற்கு மேலும் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகிறது
- தமிழ்நாட்டில் நேற்று கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது – ஒரே நாளில் 1,971 நபர்களுக்கு கொரோனா
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 588 நபர்கள் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்.
- மாநிலம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 28 பேர் உயிரிழப்பு
- பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா மற்றும் ஆசிரியை சுஷ்மிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
- சிவசங்கர் பாபா மீதான அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் மனு தள்ளுபடி – செங்கல்பட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
- பிரதமர் மோடி நேபாள பிரதமருடன் தொலைபேசியில் ஆலோசனை
- பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்ரா கைது – ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலி மூலம் வௌியிட்டதாக குற்றச்சாட்டு
- மகாராஷ்ட்ரா மாநில தலைநகர் மும்பையில் தொடர்ந்து மூன்று நாட்களாக கனமழை – பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது
- நாட்டின் தலைநகர் டெல்லியில் நேற்று ஒருநாள் முழுவதும் மழை – மழைநீர் சாலைகளில் தேங்கியதால் கடும் வாகன நெரிசல்
- மயிலாடுதுறையில் மூன்று நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களின் போராட்டம் வாபஸ்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கும் நேற்று இரவு பலத்த மழை
- பாகிஸ்தானில் லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதல் – பக்ரீத் கொண்டாட சென்ற 30 தொழிலாளர்கள் உயிரிழந்த பரிதாபம்
- கொரோனா வைரசின் நான்காவது அலை தொடங்கிவிட்டது – பிரான்ஸ் அரசு எச்சரிக்கை
- டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
- உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெப் பெசோஸ் நாளை விண்வெளிப் பயணம்
Morning Wrap | 20.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்
சுகுமாறன்
Updated at:
20 Jul 2021 06:56 AM (IST)
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
12_மதிப்பெண்_பட்டியலை_அமைச்சர்_அன்பில்_மகேஷ்பொய்யாமொழி_வெளியிட்டபோது
NEXT
PREV
Published at:
20 Jul 2021 06:56 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -