• ஜூலை 19-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

  • 22-ந் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – தமிழக அரசு

  • தமிழ்நாட்டில் வரும் 31-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

  • ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர்களுக்கான புத்தக விநியோகத்திற்கு தமிழக அரசு அனுமதி

  • தட்டச்சு பயிற்சி மையங்கள், ஐ.டி.ஐ. பயிற்சி மையங்கள் இயங்குவதற்கு அனுமதி

  • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய தடகள அணியில் கிராமப்புறத்தினர் இடம்பிடித்திருப்பதற்கு முதல்வர் பெருமிதம்

  • தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறைக்கு தமிழக அரசு ஊக்கம் அளிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

  • மேகதாது அணையை கட்ட அனுமதிக்க கூடாது என்று தமிழக அனைத்துக்கட்சி குழு மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

  • டெல்லி சென்ற அனைத்துக்கட்சி குழுவினர் சென்னை திரும்பினர்

  • மாநிலத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகரில் நேற்று இரவு பலத்த மழை

  • ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் : அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு

  • நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனுவில் தன் மீதான விமர்சனங்களை நீக்க கோரிக்கை என தகவல்

  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 312 நபர்களுக்கு புதியதாக கொரோனா

  • கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 46 பேர் உயிரிழப்பு

  • தமிழ்நாட்டிற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் – பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

  • ஆடி மாத ஐயப்பன் கோவில் ஆடி மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டது

  • சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி

  • முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியுடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் சந்திப்பு

  • லடாக் விவகாரம் தொடர்பாக ராஜ்நாத் சிங் சரத்பவாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்

  • விவசாயிகள் பயன்பெறவே புதிய வேளாண் சட்டங்கள் – மத்திய வேளாண்துறை அமைச்சர்

  • பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிப்பதற்கு மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தொடர்ந்து எதிர்ப்பு – சோனியாகாந்திக்கு கடிதம்

  • குஜராத் மாநிலத்தில் ரூபாய் 1,100 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • டெல்டா வைரசால் பாதிக்கப்பட்ட 80 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் – ஆய்வில் தகவல்


இது போன்ற முக்கியச் செய்திகளை அடுத்தடுத்து அறிய இணைந்திருங்கள் ABP நாடு இணையதளத்தில்!