புதுச்சேரியில்  தொடர் இருசக்கர வாகன திருட்டு புகார் தொடர்பாக புதுச்சேரி காவல் துறையினருக்கு வந்தவண்ணம் இருந்தது,தொடர் திருட்டின் காரணமாக போலீசார்  சிசிடிவி காட்சிகள் கைப்பற்றி அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் புதுச்சேரி தவளக்குப்பம் போலீசார், அதிரடிப்படை போலீசார் நேற்று முன் தினம் மாலை, அபிஷேகப்பாக்கம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.




அப்போது, புல்லட் மோட்டார் பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த 4 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர், இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 பேரும் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர், இதில் கடலுார் பூண்டியாங்குப்பம் புருஷோத்தமன், 23; ஆலப்பாக்கம் பன்னீர் ஓடை பிரகாஷ் குமார்,19; புதுச்சேரி ஆண்டியார்பாளையம் சிவலிங்கம், 22; பிள்ளையார் குப்பம் சங்கர்,39; இவர்கள் பைக், வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெயரியவந்தது.


மேலும் அவர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மோட்டார் பைக்குகள் திருடி விற்பதை ஒப்புக் கொண்டனர். அதையடுத்து, நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நான்கு மோட்டார் பைக்குகளை பறிமுதல் செய்தனர். 




இது தொடர்பாக, தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் அளித்த பேட்டி :


மோட்டார் பைக் திருட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி, கடலுார் பூண்டியாங்குப்பத்தை சேர்ந்த புருஷோத்தமனுக்கு, பைக் மெக்கானிக் வேலை தெரியும். இவர் தலைமையில் மோட்டார் பைக்குகளை திருடி வந்துள்ளனர். குறிப்பாக புல்லட் பைக்குகளை மட்டும் குறி வைத்து தூக்கியுள்ளனர். புருஷோத்தமன் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் கடலுார், விழுப்பும் புதுச்சேரி பகுதியில் நிலுவையில் உள்ளது. புருஷோத்தமனை தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப் பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.




சட்டம்- ஒழுங்கு குறித்த கூட்டத்தில், புதுச்சேரியில் மிக நீண்ட காலத்துக்குப் பிறகு உள்துறை அமைச்சர் என்ற தனிப்பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், காவலர்கள் நலம், இடமாற்றம், பதவி உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டு மாநிலம் முழுவதும் மக்கள் நிம்மதியாக, அமைதியான முறையில் வாழ்வதை உறுதி செய்வோம். சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கும் சக்திகள் மீது உறுதியான நடவடிக்கையினை மேற்கொண்டு அமைதியை நிலைநாட்டுவோம். குற்றவாளிகளுடன் போலீஸார் தொடர்புவைத்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்.


தமிழகத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரிதிருக்கிறது. இதற்கான அண்டை மாநில போலீஸாருடன் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இத்தகைய குற்றங்களை ஒடுக்கவும், முழு நேர கண்காணிப்புக்கு வசதியாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம். பொதுமக்களை அச்சுறுத்தும் செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றத்தில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள்.


மேலும் படிக்க :


புதுச்சேரி : குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை : அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை