போராட்டம்- துப்பாக்கிச்சூடு:


ஹரியானாவில் அக்னிபத் ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக ராணுவத்தில் சேர தயாராகி வரும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்கள் மீது  காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிகழ்கிறது.






அக்னிபத் திட்டம்:


கடந்த 14 ஆம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் வகையிலான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தனர். அதே தருணத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


போராட்டம்:


அக்னிபத் திட்டத்திற்கு பீகாரில் ராணுவ பணிக்கு தயாராகி வரும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் வன்முறையாக மாற தொடங்கியது. சில இடங்களில் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டன, சில இடங்களில் ரயில்கள் சேதமாக்கப்பட்டன.


காவல்துறை - போராட்டக்காரர்கள்:


இந்நிலையில் ஹரியானாவில் போராட்டம் தீவிரமடைந்தது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீச தொடங்கினர். காவல்துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தினர். வன்முறையால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன.மேலும் காவல்துறையினருக்கும் காயங்கள் ஏற்பட்டன.