Haryana:  ஹரியானாவில், தன்னுடன் பைக்கில் வர மறுத்த பக்கத்து வீட்டுப்பெண்ணை ஹெல்மெட்டில் கண்மூடித்தனமாக வாலிபர் தாக்கும் வீடியோ வைரலான நிலையில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பெண்ணைத் தாக்கிய இளைஞர்:


ஹரியானாவில் பைக்கில் பயணிக்க மறுத்த பெண்ணை ஹெல்மெட்டால் அடித்த நபர் வீடியோவின் மூலம் காவல் துறையிடம் சிக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குருகிராம் ஏசிபி மனோஜ் கே, குருகிராம் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கமல் என்ற நபர் தனது வீட்டிற்கு  பக்கத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை ஹெல்மெட்டால் அடித்துள்ளார், அவர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். 


இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், ஆட்டோ ரிக்‌ஷாவின் அந்த பெண் அமர்ந்து இருக்க, ஆட்டோ ரிக்‌ஷாவின அருகே பைக்கில் வந்த ஆண் ஒருவர், அதில் இருந்து ஒரு பெண்ணிடம் உரையாடுகிறார். சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, அந்த ஆண் பைக்கை ஓரம் நிறுத்தி விட்டு வந்து பெண்ணிடம் தொடர்ந்து பேசுகிறார். அதன் பின்னர் ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து வெளிவந்த பெண்ணை, அந்த ஆண் தனது ஹெல்மெட்டால்  அடிக்கிறார். 


கைது:


அப்போது ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் தலையிட்டபோதும் அந்தப் பெண்ணை அந்த நபர் தொடர்ந்து தாக்கிக்கொண்டு இருந்தார். மேலும் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணை தாக்கியவரை அந்தப் பெண்ணிடம் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். அபோது அங்கிருந்து தப்பித்துச் சென்ற நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.






குற்றம் சாட்டப்பட்டவர் பெயர் கமல் என்றும், அவர் மீது ஐ.பி.சி.யின் பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏசிபி மனோஜ் கே தெரிவித்தார்.


ஹரியானாவின் யமுனாநகரில் ஒரு பெண் கடத்தல் முயற்சியில் இருந்து சிறிது நேரத்தில் கமல் தப்பித்தித்த  சில நாட்களுக்குப் பிறகு இது வந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. நான்கு பேரும் தங்கள் கடத்தல் முயற்சியை கைவிட்டு, பெண் சத்தம் போட்டு சண்டையிட்டதைத் தொடர்ந்து ஓடிவிட்டனர் எனவும் ஏசிபி  ம்னோஜ் கே தெரிவித்துள்ளார்.