"உன் ரத்தத்தை குடிச்சிருவேன்" அம்மாவை கடித்து வைத்த மகள்.. பதறவைக்கும் வீடியோ!
பெண்ணின் கன்னத்தில் அறைந்தது மட்டும் இன்றி, ரத்தத்தை குடித்துவிடுவேன் என அவரது மகளே கூறியுள்ளார். ஹரியானாவில் பெண் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஹரியானாவில் தன்னை பெற்றெடுத்த தாயின் முடியை பிடித்து இழுத்து, அவரது மகளே அவரை கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாயின் கன்னத்தில் அறைந்தது மட்டும் இன்றி, ரத்தத்தை குடித்துவிடுவேன் என அவரது மகள் கூறியுள்ளார். தாயை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தாயை கொடுமைப்படுத்திய மகள்:
ஹரியானா மாநிலம் ஹிசாரில் தன்னுடைய தாயான நிர்மலா தேவியை அவரது மகள் ரீட்டா கடுமையாக தாக்கியுள்ளார். சொத்து தகராறு காரணமாக தாயை பிடித்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அந்த பெண்ணின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தாயை அவரது மகளே தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, அந்தப் பெண்ணின் சகோதரர், தங்கள் தாயை சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், தனது சொத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்காக மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அந்தப் பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பதறவைக்கும் வீடியோ:
வீடியோவில் ரீட்டா, தனது தாயார் நிர்மலா தேவியுடன் ஒரு படுக்கையில் அமர்ந்திருப்பதைக் காணலாம். நிர்மலா தேவி அழுதுகொண்டிருக்கிறார். தாயை திட்டிவிட்டு, அவரது காலில் கடுமையாக தாக்குகிறார் ரீட்டா. தாயின் அலறல்களைப் பொருட்படுத்தாமல் தொடையில் அடிக்கிறார்.
"இது வேடிக்கையாக இருக்கிறது. நான் உங்க ரத்தத்த குடிப்பேன்" என நிர்மலா தேவிடம் ரீட்டா கூறுகிறார். ரீட்டா தொடர்ந்து அழுகிறார். ஆனால், ரீட்டா அவருடைய தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரைக் கீழே இழுத்து, அவரை மீண்டும் கடிக்கத் தொடங்குகிறார். ரீட்டா தன் தாயை மீண்டும் அறைந்துவிட்டு, "நீ என்றென்றும் வாழ போகிறாயா?" என்று கேள்வி கேட்கிறார்.
ரீட்டாவின் சகோதரர் அமர்தீப் சிங் தனது புகாரில், தனது சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சஞ்சய் புனியாவை மணந்ததாகவும், ஆனால் விரைவில் தனது தாய் வீட்டிற்குத் திரும்பியதாகவும் கூறினார். பின்னர், அவர் சொத்துக்காக தங்கள் தாயைத் துன்புறுத்தத் தொடங்கினார்.
இதையும் படிக்க: அதிமுக-காரன் பணத்துல சளைச்சவன் இல்ல.. தேர்தல்ல நாங்களும் பண்ணுவோம்! முன்னாள் அமைச்சர் பேச்சு