இந்தியாவின் வேளாண் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது என்றும் 10-11 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் உற்பத்தி சுமார் 265 மில்லியன் டன்னாக இருந்தது என்றும், அது தற்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பிரதமர் மோடி என்ன பேசினார்?

வேளாண்மை, கிராமப்புற வளம் ஆகியவை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் இன்று பங்கேற்றார்.

Continues below advertisement

"எந்தவொரு விவசாயியும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு விவசாயியையும் முன்னேற்றுவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. விவசாயம் வளர்ச்சியின் முதல் அம்சமாக கருதப்படுகிறது. விவசாயிகளுக்கு பெருமைக்குரிய இடத்தை அரசு அளிக்கிறது.

விவசாயத் துறையின் வளர்ச்சி, கிராமங்களின் செழிப்பு என ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை நோக்கி இந்தியா செயல்பட்டு வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ. 3.75 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை 11 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுவது. கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தின் பயன்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதற்காக விவசாயிகளை மையமாகக் கொண்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

"சாதனை அளவை எட்டிய விவசாய உற்பத்தி"

இடைத்தரகர்கள் அல்லது கசிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபோன்ற திட்டங்களின் வெற்றி, வல்லுநர்கள், தொலைநோக்கு கொண்ட தனிநபர்களின் ஆதரவு ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகும் என்று பிரதமர் கூறினார். அவர்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், எந்தவொரு திட்டத்தையும் அவர்களின் உதவியுடன் முழு வலிமையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

இவர்களது முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை அமல்படுத்த அரசு தற்போது துரிதமாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை கோருவதாகவும் கூறினார்.

இந்தியாவின் வேளாண் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், 10-11 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் உற்பத்தி சுமார் 265 மில்லியன் டன்னாக இருந்தது என்றும், அது தற்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது என்றும் கூறினார்.

இதேபோல், தோட்டக்கலை உற்பத்தி 350 மில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது என்றார். விதை முதல் சந்தை வரையிலான அரசின் அணுகுமுறை, வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், வலுவான மதிப்புச் சங்கிலி ஆகியவை இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார்.

நாட்டின் வேளாண் திறனை முழுமையாகப் பயன்படுத்தி, இன்னும் பெரிய இலக்குகளை அடைய வேண்டியதன் அவசியத்தை நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்த வகையில், குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட 100 விவசாய மாவட்டங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் பிரதமரின் தன தன்ய கிரிஷி யோஜனா அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

'முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள்' திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி அளவுகோல்களில் நேர்மறையான பலன்கள் கிடைத்திருப்பதாகவும், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றால் பயனடைவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த 100 மாவட்டங்களில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் பிரதமரின் தன தன்ய கிரிஷி யோஜனா திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல, ஒவ்வொருவரும் இந்த மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட பலன்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.