பிரபல ஆர்.பி.ஜி குரூப் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா. இவர் ட்விட்டரில் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர். அவருடைய பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் எப்போதுமே பரவலாகப் பேசப்படும். பல ஊக்கமளிக்கும் இடுகைகள் முதல் ஆப்டிகல் இல்யூஷன் வீடியோக்கள் வரை தனக்குப் பிடித்தமான பல சுவாரசியமான இடுகைகளை அவர் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது அனுப்பியிருந்த தனிப்பட்ட செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 


"இன்று நான் அந்த மிக உயரிய மனிதரிடமிருந்து இந்த அழகான வார்த்தைகளை பெற்றுக்கொள்ள ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்று ஹர்ஷ் கோயங்கா தனது ட்விட்டரில் ஒரு ட்வீட்டில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் ஒரு ஆவணத்தின் ஒரு பகுதியைக் காட்டும் படம் பகிரப்பட்டிருந்தது. அந்தப் படத்தில் அமிதாப் பச்சனின் கையொப்பம் மற்றும் அதன் கீழே இந்தியில் எழுதப்பட்ட சில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. பழம்பெரும் கவிஞரும் அமிதாப் பச்சனின் தந்தையுமான ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய கவிதையின் வரிகள் அவை.






இந்த ட்வீட் சில மணிநேரங்களுக்கு முன்பு பகிரப்பட்டது. இடுகையிடப்பட்டதிலிருந்து, இந்த இடுகை 67,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் அந்த எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.இந்தப் பகிர்வுக்கு 700-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவிந்துள்ளன. அதற்கு மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கமெண்ட்களையும் பகிர்ந்து வருகின்றனர்.






அதில் கோயங்காவின் பகிர்வுக்கு கமெண்ட் செய்துள்ள நடிகர் ரன்வீர் ஷோரே...“எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி! அழகான வார்த்தைகள்,” என பதில் அளித்துள்ளார். மேலும் சில  "ஒரு லெஜண்டிடம் இருந்து  ஒரு வாழ்த்தைப்பெறுவது பெரிய மரியாதை. நீங்கள் இதைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்,” என்று வேறு ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். "ஆஹா," என்று மற்றொருவர் கருத்து தெரிவித்து பாராட்டியுள்ளார். "என்ன அழகான வரிகள்," என மேலும் ஒருவர் கூறியுள்ளார். “ஒரு பெரிய மனிதரிடமிருந்து ஒரு சிறந்த மனிதருக்கு சிறந்த வார்த்தைகள். அருமை,” என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.  அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன தெரியுமா?? கீழே உள்ள ட்வீட்டில் பாருங்கள்.