நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி இந்திய குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படுகிறது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்றுதான் இந்திய அரசியலமைப்பு இறுதி செய்யப்பட்டது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், இந்தியக் குடிமகன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? கூடாது? என்பதற்கான அடிப்படை அம்சங்கள் அதில்தான் உருவாக்கப்பட்டன.

Continues below advertisement


2025ஆம் ஆண்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், குடியரசு தின வாழ்த்து செய்திகளை நீங்கள் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைக்கலாம். உங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழலாம். இதோ டிப்ஸ்!           


தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் உணர்வு


"நமது சுதந்திரத்திற்காகப் போராடிய துணிச்சலான ஆளுமைகளை கவுரவிப்போம், ஒரு தேசமாக நம்மை ஒன்றிணைக்கும் உணர்வைக் கொண்டாடுவோம். குடியரசு தின வாழ்த்துகள்!"


"இந்தக் குடியரசு தினத்தில், நீதி, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் லட்சியங்களை நிலைநிறுத்த உறுதிமொழி எடுப்போம். ஜெய் ஹிந்த்!"


"குடியரசு தினத்தின் உணர்வு, பிரகாசமான மற்றும் வலிமையான இந்தியாவுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற நம்மைத் தூண்டட்டும். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்வோம்!"




இந்திய தேசத்திற்கு வீர வணக்கம்!


"மனதில் சுதந்திரம், வார்த்தைகளில் நம்பிக்கை, நம் இதயங்களில் பெருமை. நம் இந்திய தேசத்திற்கு வீர வணக்கம்!"


"இந்த குடியரசு நன்னாளில், சிறந்த, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதியை புதுப்பித்துக் கொள்வோம்."


"ஈடு இணையே இல்லாத தேசத்தின் மீது பெருமை, மகிழ்ச்சி மற்றும் அன்பைச் செலுத்துவதற்காக வாய்த்த இந்த நாளைப் பெருமையுடன் நினைவுகூர்கிறேன். குடியரசு தின வாழ்த்துக்கள்!"




தேசத்தைக் கொண்டாட ஒன்று சேர்வோம்


"நமது தேசத்தின் உணர்வைக் கொண்டாட ஒன்று சேர்வோம். உங்களுக்கு அன்பான குடியரசு தின வாழ்த்துக்கள்!"


"இந்த சிறப்பு நாளைக் கொண்டாடும் வேளையில், நமது மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் வணக்கம் செலுத்துவோம்."


"இந்தக் குடியரசு தினத்தில், இந்தியாவைப் பெருமைப்படுத்தியவர்களின் பாரம்பரியத்தை போற்றுவோம். ஜெய் ஹிந்த்!"


"நமது மூவர்ணக் கொடி எப்போதும் உயரப் பறக்கட்டும், வளமான தேசத்திற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம். குடியரசு தின வாழ்த்துக்கள்!"


அதேபோல குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம். இதோ உங்களுக்கு டிப்ஸ்!


"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! இந்தியாவின் பிரத்யேக ஒற்றுமை மற்றும் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவோம்."


"குடியரசு தினத்தன்று உங்களுக்கு அன்பான வாழ்த்துகளை அனுப்புகிறேன்! நம் நாடு தொடர்ந்து செழித்து பிரகாசிக்கட்டும்."


"இந்தியத் திருநாட்டின் சாதனைகளில் பெருமை கொள்வோம், அதன் வளர்ச்சிக்கு பங்களிப்போம் என உறுதி அளிப்போம். குடியரசு தின வாழ்த்துக்கள்!"


அரசமைப்பின் மதிப்புகளைப் போற்றிப் பாதுகாப்போம்!


"இந்த குடியரசு தினத்தில், பெருமை, நம்பிக்கை மற்றும் நாட்டின் மீதான பற்றை இதயத்தில் வைத்துக் கொண்டாடுவோம்!"


"நமது அரசியலமைப்பை மதிக்கும் அதே வேளையில், அதன் மதிப்புகளைப் போற்றிப் பாதுகாக்க நம்மை நாமே நினைவுபடுத்திக் கொள்வோம்!"


அனைவருக்கும் அன்பான குடியரசு நாள் வாழ்த்துகள்!


இதையும் வாசிக்கலாம்: Republic Day Speech: இந்திய குடியரசு தினம்; மாணவர்கள் என்ன பேசலாம், எழுதலாம்? தனித்துவமாகத் தெரிய டிப்ஸ்!