Republic Day 2025: குடியரசு தினம்.. 600 மணி நேர பயிற்சி, முப்படைகளின் பேரணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Republic Day 2025: குடியரசு தின கொண்டாட்டம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Republic Day 2025: குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும், முப்படைகளின் பேரணி குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

76வது குடியரசு தின விழா கொண்டாட்டம்:

இந்தியா தனது குடியரசு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று கொண்டாடுகிறது. 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நமது நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. தேசிய விடுமுறை என்பதைத் தாண்டி, அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை மதிக்க நாட்டு மக்கள் ஒன்று கூடுவதால், குடியரசு தினம் மகத்தான பெருமையுடன் கொண்டாடப்படுகிறது. கூடுதலாக, குடியரசு தின அணிவகுப்பு டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் நடக்கிறது. இந்த நிலையில், இந்த சிறப்பு நாள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் அணிவகுப்பு பற்றிய சுவாரஸ்யமான மற்றும் அதிகம் அறியப்படாத உண்மைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

குடியரசு தினம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள்:

1. 1930 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸால் செய்யப்பட்ட முழுமையான சுதந்திரம் பிரகடனத்தின் நினைவாக ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த பிரகடனம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான சுதந்திரத்தை கோரியது.

2. குடியரசு தின அணிவகுப்புக்கான தயாரிப்பு 6 மாதங்களுக்கு முன்பு ஜூலை மாதமே தொடங்குகிறது. பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பைப் பற்றி முறையாகத் தெரிவிக்கிறார்கள். மேலும் அணிவகுப்பு நாளில், அவர்கள் அதிகாலை 3 மணிக்கு இடத்திற்கு வந்துவிடுவார்கள். அதன்படி, அணிவகுப்பில் ஈடுபடுர்கள் சுமார் 600 மணி நேரம் பயிற்சி செய்திருப்பார்கள்.

3. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தின அணிவகுப்புக்கு ஒரு நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது ஆட்சியாளர் முதன்மை விருந்தினராக அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டு முதன்மை விருந்தினராக  இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்கிறார்.

4. துப்பாக்கி சல்யூட்டின் துப்பாக்கிச் சூடானது தேசிய கீதம் ஒலிக்கும் நேரத்துடன் பொருந்துகிறது. கீதத்தின் தொடக்கத்தில் முதல் துப்பாக்கிச் சூடு ஏவப்படுகிறது, அடுத்தது 52 வினாடிகளுக்குப் பிறகு சுடப்படுகிறது. சுட பயன்படுத்தப்படும் பீரங்கிகள் 1941 இல் தயாரிக்கப்பட்டன மற்றும் ராணுவத்தின் அனைத்து முறையான திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன.

5. ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்திற்கு ஒரு தீம் முடிவு செய்யப்படுகிறது, அதை பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறைகள் பின்பற்றுகின்றன. 2025 ஆம் ஆண்டுகுடியரசு தின அணிவகுப்புக்கான தீம் ஆக,  தங்க இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு என முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சார பாரம்பரியம் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை அவை வெளிப்படுத்தும்.

6. பிரமாண்ட அணிவகுப்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ள ரைசினா மலையிலிருந்து, கர்தவ்யா பாதை வழியாக, இந்தியா கேட் தாண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை வரை தொடங்குகிறது.

7. இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 1935 ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தை மாற்றியமைத்த இந்த முக்கிய ஆவணத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.

8. முதல் குடியரசு தின கொண்டாட்டங்கள் 1950 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இர்வின் ஸ்டேடியத்தில் (தற்போது மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 3,000 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

9. குடியரசு தினத்தன்று, உயிரைக் காப்பாற்றுவதில் அல்லது அநீதிகளுக்கு எதிராக நிற்பதில் விதிவிலக்கான தைரியத்தை வெளிப்படுத்தும் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் தேசிய வீர விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

10. பத்ம விருதுகள் - இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று - தேசத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அங்கீகரிக்கும் வகையில், இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒரு மாபெரும் விழாவில் வழங்கப்படுகிறது.

11. முப்படைகளின் பிரமாண்ட அணிவகுப்பு குடியரசு தினத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் ராணுவ வலிமை, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்துகிறது.

12. குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அவை இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், வரலாறு மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement
Sponsored Links by Taboola