இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.அன்றைய நாளில்  இந்தியாவை இறையாண்மை கொண்ட நாடாகவும், சுதந்திர நாடாக வழிவகுத்த வரலாற்று தியாகங்கள் நினைவு கூறப்படும்.


நாடு முழுவதும் இந்த ஆண்டு இந்தியா தனது 73வது குடியரசு தினத்தைக் கொண்டாட இருக்கிறது. சுதந்திர வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்தியக் கொடியை வான் உயர்த்தி பெருமை கொள்ளும். அதேபோல், இந்தியாவின் தேசிய தலைநகரான டெல்லியில் ராணுவ அணிவகுப்பு, தேசியக் கொடியை ஏற்றுதல் உள்ளிட்ட பிரமாண்டமான கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.


இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் கலந்துகொண்டு நாட்டு மக்களிடம் உரையாற்ற இருக்கின்றனர். பாதுகாப்பு இராணுவப் படைகள் மற்றும் வல்லுநர்களால் ஸ்டண்ட்கள் நிகழ்த்தப்பட்டு, அவை அனைத்தையும் ஒரு கண்கவர் நிகழ்ச்சிகளாக அரங்கேற இருக்கின்றது. 


குடியரசு தினமான அன்றைய நாளில் சுதந்திரப் போராளிகள் மற்றும் தேசபக்தர்கள் எவ்வாறு இந்தியாவுக்காக பல தியாகங்களை செய்தனர் என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு எப்படி  மதிப்பளிக்கபட்டு வருகின்றனர் என்றும் பெருமை கொள்வோம். 


மாணவர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். ஒரு இந்தியராக இருப்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். இந்தநிலையில், குடியரசு தினவிழாவில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நீங்கள் பகிர்ந்த, பகிர்ந்து கொள்ளக்கூடிய சில வாழ்த்துகள், செய்திகள் பின்வருமாறு : 


குடியரசு தின வாழ்த்துக்கள் : 














 


உங்கள் சுதந்திரத்தை அனுபவியுங்கள், ஆனால் தலைவர்கள் செய்த பல தியாகங்களை மறந்துவிடாதீர்கள் . குடியரசு தின வாழ்த்துக்கள்!


குடியரசு தின வாழ்த்துக்கள்! இன்று நாம் எந்த இடத்தில் இருந்தாலும், இந்தியா என்பது நிலையான அடையாளம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண