ரூ. 3419 கோடி மின்கட்டனம்… மயங்கி விழுந்த மாமனார்! மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!

இந்த மின் கட்டண தொகையை கேட்ட பிரியங்கா குப்தா தனது மாமனாரிடம் கூறி இருக்கிறார். அதனை கேட்ட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமே வந்து விட்டது.

Continues below advertisement

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு வீட்டிற்கு 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரசீது அனுப்பப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement

ஷாக் அடித்த மின்கட்டனம்

மின்சாரம் ஷாக் அடிக்கும், மின் கட்டணமும் ஷாக் அடிக்கும் என்று விளையாட்டாக கூறுவார்கள். ஆனால் மின்வாரியம் போட்ட பில்லை பார்த்த நபர் உண்மையிலேயே ஷாக் ஆகி மயங்கி விழுந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது. மத்திய பிரதேச மாநிலம், குவாலியரின் ஷிவ் விகார் காலனியில் வசித்து வருபவர்தான் பிரியங்கா குப்தா.  இவர் வீட்டில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

3419 கோடி பில்

பிரியங்கா குப்தாவிற்க்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பான ரசீது வந்துள்ளது. அதில், 3 ஆயிரத்து 419 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்தது. இதனை கண்ட அந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தார். உண்மையிலேயே அந்த தொகை தான் போட்டிருக்கிறதா என்று திரும்ப திரும்ப அந்த ரசீதை சுற்றி சுற்றி பரிசோதித்துள்ளனர். ஆனால் அதில் அந்த தொகை தான் உண்மையிலேயே போட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்: AK 61: பேங்க் செட்.. துப்பாக்கி ஏந்திநிற்கும் போலீஸ்.. பரபரக்கும் படப்பிடிப்பு.. AK61 வீடியோ வைரல்..!

மயங்கி விழுந்த மாமனார்

இந்த மின் கட்டண தொகையை கேட்ட பிரியங்கா குப்தா தனது மாமனாரிடம் கூறி இருக்கிறார். அதனை கேட்ட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமே வந்து விட்டது. மயக்கமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மின்வாரியத்தின் தவறு

என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்ள, இதுதொடர்பாக மின்சாரத் துறை அலுவலகத்தை தொடர்புகொண்டபோது, சிறிய தவறு ஏற்பட்டதன் காரணமாகவே இப்படியான ரசீது அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற பல தவறுகள் வங்கிகளிலும், மின்வாரியத்திலும் நடப்பது வழக்கம். சிலருக்கு கணக்கில் பல கோடி ரூபாய் போடப்பட்டிருப்பது போன்றும், சிலருக்கு எடுக்கப்பட்டது போன்றும் செய்திகளை கண்டுள்ளோம். வெளிநாடுகளில் கூட மின்கட்டனம் இது போன்று கோடிக்கணக்கில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

Continues below advertisement