‘ஏகே 61’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  


லண்டனில் ஒரு மாத காலமாக பைக்கில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் அஜித், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்தடைந்தார். அவர்  சென்னை வந்தது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 






 ‘ஏகே 61’ என்று அழைக்கப்பட்டு வரும் அவரது 61 படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அந்தப்படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கட்டிடம் இடம் பெற்றுள்ளது. மேலும் அங்கு போலீஸ் உடை அணிந்த துணை நடிகர் ஒருவர் துப்பாக்கியுடன் நிற்கிறார்.






இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேங்கில் நடக்கும் கொள்ளையை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், அஜித் இதில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், இதில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.


ஹெச். வினோத் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன்  போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண