குஜராத்தில் உப்பு ஆலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் மோர்பி பகுதியில் உப்பு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் இன்று பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று அந்த நிறுவனத்தின் சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி சுமார் 12 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சுவர் இடிந்து விழும் போது அப்பகுதியில் 30 பணியாளர்கள் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் தற்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், “மோர்பி பகுதியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தேவையான பணிகளை உள்ளூர் அதிகாரிகள் செய்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த இடிபாடு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை குஜராத் அரசு அறிவித்துள்ளது. பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்