குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஹர்த்திக் படேல் முக்கிய தலைவராக இருந்து வந்தார். அவர் படேல் சமூகத்தில் மிகவும் முக்கியமான நபராக அம்மாநிலத்தில் கருத்தப்பட்டு வந்தார். 


 


இந்நிலையில் இன்று திடீரென்று அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “இன்று நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி விட்டேன். காங்கிரஸ் கட்சி சமீப காலமாக நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் நடைபெறும் பல்வேறு விஷயங்களை காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக உள்ளது. பிரதமர் மோடி என்ன செய்தாலும் அதையும் எதிர்க்கும் நிலையில் தான் காங்கிரஸ் உள்ளது  ” எனக் குறிப்பிட்டுள்ளார். 


 






குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவார் என்ற தகவல் வெளியாகி வந்தது. இந்தச் சூழலில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டேல் சமூகத்தின் வாக்குகளை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எடுக்க பாஜக இவரை தன் பக்கம் இழுத்துள்ளதாக கூறப்படுகிறது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண