குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது பட்வா கிராமம். கடலோர கரையில் உள்ள இந்த கிராமத்தில் கடற்கரைக்கு மக்கள் வந்து நேரத்தை கழிப்பது வழக்கம். சிலர் கடலில் இறங்கி குளிப்பதும் வழக்கம். இந்த நிலையில்,  அந்த கடற்கரைக்கு கல்பேஷ் சியா, நிகுல் குஜாரியா, விஜய் குஜாரியா மற்றும் ஜீவன் குஜாரியா ஆகியோர் குளிக்கச் சென்றனர்.


காப்பாற்றிய எம்.எல்.ஏ.


கடலில் ஆழமான பகுதிக்கு குளிக்கச் சென்ற அவர்கள் திடீரென கடலில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கூச்சலிட்டும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஹீரா சோலங்கி கேள்விபட்டுள்ளார். தகவலறிந்த அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் விரைந்துள்ளார்.


அவர் சட்டென்று கடலில் இளைஞர்கள் மூழ்கிய இடம் குறித்து கேட்டறிந்தார். உடனடியாக அவர் சற்றும் தாமதிக்காமல் படகில் மீட்பு வீரர்களுடன் சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.






வெறும் படகில் மட்டும் சென்று தேடாமல் நடுக்கடலில் அவர்களை தேடும் பணியிலும் ஈடுபட்டதுடன், அவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளார். பின்னர், உடனடியாக கடலில் குதித்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டார். சினிமாவை மிஞ்சும் அளவிற்கு கடலில் துரிதமாக அவர்களை தேடிய எம்.எல்.ஏ. நீரில் மூழ்கிய 3 இளைஞர்களை காப்பாற்றினார். ஆனால், துரதிஷ்டவசமாக ஒரு இளைஞரை மட்டும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர், நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த இளைஞரின் சடலம் மட்டும் கரை ஒதுங்கியது.


குவியும் பாராட்டு:


இளைஞர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் என்ற தகவல் அறிந்தவுடன் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்தது மட்டுமின்றி, நீரில் மூழ்கிய 3 இளைஞர்களை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மட்டுமின்றி இணையத்திலும் தீயாய் பரவியது. மிகவும் சாமர்த்தியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டு இளைஞர்களை காப்பாற்றி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சோலங்கிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


எம்.எல்.ஏ. ஹீரா சோலங்கியின் சகோதரர் புருஷோத்தம் சோலங்கியும் 1998ம் ஆண்டு முதல் பாவ்நகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.


மேலும் படிக்க: Wrestlers Protest : மல்யுத்த வீராங்கனைகள் மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருக்காங்க.. குற்றம்சாட்டப்பட்ட ப்ரிஜ் பூஷண் சிங் பேச்சு


மேலும் படிக்க: Arvind Kejriwal: ’டெல்லி மக்களுடன் துணை நிற்பதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது..’ டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டி..!