குஜராத், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிந்ததை அடுத்து இன்று காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 


இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 68 தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், மொத்தம் 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.


 தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரு கட்சியும் சம நிலையில் உள்ளது. அதாவது இருவரும் 34 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.