குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவி அந்த மாநில முதலமைச்சராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
அமைச்சர்களின் லிஸ்ட்டை பார்ப்போம்.


குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தற்போதுள்ள நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாடு, சாலை மற்றும் கட்டிடம், சுரங்கம், சுற்றுலா, துறைமுகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு ஆகிய துறைகளை வைத்துள்ளார்.
அதே நேரத்தில் ஹர்ஷ் சங்கவி மாநில உள்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். அத்துடன், இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்ற பிறகு,  சில மணி நேரங்களில் முழு அமைச்சரவை பட்டியல் வெளியானது. கனு தேசாய், நிதி, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வந்த்சிங் ராஜ்புத்துக்கு தொழில்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகள் ஒதுக்கப்பட்டன. ராகவ்ஜி படேலுக்கு விவசாயம், மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஒதுக்கப்பட்டுள்ளது.
முலுபாய் பெராவுக்கு காடு மற்றும் சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



  • கேபினட் அமைச்சர் பெயர் மற்றும் துறைகள்

  • கனுபாய் தேசாய்-நிதி, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்

  • பல்வந்த்சிங் ராஜ்புத்-தொழில்கள், MSMEகள், சிவில் விமான போக்குவரத்து, தொழிலாளர்

  • குவர்ஜிபாய் பவாலியா-நீர் மற்றும் பாசனம், சிவில் சப்ளைஸ்

  • ருஷிகேஷ் படேல்-உடல்நலம் மற்றும் குடும்ப நலன், சட்டம்

  • ராகவ்ஜி படேல்-விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி

  • பானுபென் பாபரி-பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நீதி

  • முலுபாய் பெரா-சுற்றுலா, கலாச்சாரம், காலநிலை மாற்றம்

  • டாக்டர் குபேர் திண்டோர்-பழங்குடியினர் மேம்பாடு, ஆரம்பக் கல்வி

  • ஹர்ஷ் சங்கவி-உள்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் செயல்பாடுகள், என்ஜிஓக்கள், என்ஆர்ஐ

  • முகேஷ்பாய் ஜினாபாய் படேல் - காடு மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நீர்

  • குவர்ஜிபாய் நர்ஷிபாய் ஹல்பதி-பழங்குடியினர் மேம்பாடு, தொழிலாளர்

  • ஜகதீஷ் விஸ்வகர்மா-ஒத்துழைப்பு, நெறிமுறை

  • பச்சுபாய் கபாத்-பஞ்சாயத்து, விவசாயம்

  • பர்ஷோத்தம் சோலங்கி-மீன்வளம்

  • பிகுபாய் சதுர்சிங் பர்மர்-உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், சமூக நீதி

  • பிரபுல் பன்சேரியா-சட்டமன்ற விவகாரங்கள், முதன்மை, இடைநிலை மற்றும் உயர் கல்வி


முன்னதாக, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் பதவி பிரமாணம் இன்று காந்தி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


Udhayanidhi Stalin Minister: அமைச்சராகிறார் உதயநிதி...டிசம்பர் 14ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு..!


குஜராத்தில் பா.ஜ.க. ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் விஜய் ரூபானிக்கு பதிலாக முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்றார். இந்நிலையில் இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக புபேந்திர படேலையே பா.ஜ.க அறிவித்தது. இன்று முதல்வர் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.


முதல்வருடன் சுமார் 25 கேபினட் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜக குஜராத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது - மாநிலத்தின் 182 இடங்களில் 156 இடங்களையும் 53 சதவீத வாக்குப் பங்கையும் வென்றது.


இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானாவின் மனோகர் லால் கட்டார், மத்தியப் பிரதேசத்தின் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடகாவின் பசவராஜ் பொம்மை, உத்தரகாண்டின் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.