மின்சார உலை, ஆம்புலன்ஸ், கைகளுக்கான சானிடசர்கள் உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்து அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த புதிய வரிகள் நிர்ணயம் வருகின்ற செப்டம்பார் மாதம் வரை அமலில் இருக்கும். 44வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தை அடுத்து நிதியமைச்சரின் இந்தப் புதிய அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. இதன்படி பல்ஸ் ஆக்சிமீட்டருக்கு ஏற்கெனவே இருந்த 12 சதவிகித ஜி.எஸ்.டி., வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களுக்கு இருந்த 28 சதவிகித வரி 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.










மேலும் வெப்பம் பரிசோதிக்கும் கருவி,  உடல் தகனம் செய்யும் மின்சார உலை ஆகியவற்றுக்கு ஏற்கெனவே இருந்த 18 சதவிகித வரி தற்போது 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இதுதவிர கொரோனா தனிப்பு மருந்துகளான ரெம்டெசிவிர் மற்றும் இதர பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.   மேலும் மெடிக்கல் ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டி, வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்கும் ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


Also Read:வண்டலூர் பூங்கா சிங்கத்திற்கு புதிய வகை கொரோனா; மருத்துவ குழுவினர் அதிர்ச்சி!