லட்சத்தீவு தொடர்பான டிவி விவாத நிகழ்ச்சியில் உயிரியல் ஆயுதம் என கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்தூரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் புதிய நிர்வாக தலைவராக பொறுப்பேற்ற பிரபுல் ஹோடா படேல் அங்கு பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறார். இதற்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலம், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு கடுமையாக எதிர்க்கிறது. அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள்வரை பலரும் லட்சத்தீவுகளில் இயற்றப்பட்டுள்ள சட்டங்களை எதிர்க்கின்றனர். இதனால், இந்த விவகாரம் கேரளாவில் பேசுபொருளாகி, அங்கு டிவி நிகழ்ச்சிகளில் தினமும் இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
லட்சத்தீவு நிர்வாகியை உடனே நீக்க வேண்டும் - ப.சிதம்பரம் வலியுறுத்தல்
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரபல செய்தி டிவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாவதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரபல பெண் இயக்குநரும், நடிகையுமான ஆயிஷா சுல்தானா, கொரோனாவை லட்சத்தீவு மக்களுக்கு எதிரான உயிரி ஆயுதமாக (bio weapon) மத்திய அரசு பயன்படுத்துவதாகவும், அந்த ஆயுதம் பிரபுல் ஹோடா படேல் என்றும் கூறினார்.
ஆயிஷா சுல்தானா லட்சத்தீவுகளில் ஒன்றான சேதியாத் தீவை சேர்ந்தவர் ஆவார். சமூகசெயற்பாட்டாளரும் கூட. இதனைத்தொடர்ந்து, சுல்தானாவின் கருத்து தொடர்பாக பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் கவரெட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஆயிஷா சுல்தானா மீது போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சுல்தானா தான் கூறிய கருத்துகள் தொடர்பாக வரும் 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில் ஆர்பிசியின் 124 ஏ மற்றும் 153 பி கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவை இரண்டும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது லட்சத்தீவு நிர்வாகியாக உள்ள பிரபுல் பட்டேல், பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். தற்போது பிரபுல் பட்டேல் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் விதித்துள்ள புதிய விதிகள் அங்கு வாழும் மக்களின் உணவு மற்றும் வாழ்க்கை சுதந்திரங்களுக்கு பெரும் தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், பல காலமாக உள்ள மீனவர்களின் கொட்டகைகளும், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு மது விற்பனை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டதால், அந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Lakshadweep Issue: கோடாவால் வந்த கேடு, லாபம் பார்க்கப்படும் லட்சத்தீவுகள்! – என்ன நடந்தது?