மணமகன் ஒருவர் தன் வீட்டு செல்ல நாயுடன் பைக்கில் தனது திருமண மண்டபத்திற்குள் நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி பல பார்வையாளர்களை பெற்று வருகிறது.


நாய்கள் வைரல் விடியோ


நாய்கள் மனிதர்கள் வாழ்வில் சிறந்த ஞாபகங்களை உருவாக்கும் விஷயமாக உருவெடுக்கின்றன. அவற்றை மனிதர்கள் கொண்டாடும் விதமும் சில நேரங்களில் மலைக வைக்கும். நாய்கள் போல மனிதர்களுடன் ஒன்றி பழகும் விலங்கு வேறில்லை. இதனால் நாய்களுக்கும் மனிதர்களுக்குமான இணக்கத்தை வெளிக்காட்டும் விதத்தில் விடியோக்கள் நிறைய வெளிவந்து வைரல் ஆவது வழக்கம். அப்படி, சமீபத்தில் ஒரு வீடியோவும் வைரலாகி உள்ளது. மணமகன் ஒருவர் தன் வீட்டு செல்ல நாயுடன் பைக்கில் தனது திருமண மண்டபத்திற்குள் நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



செல்லபிராணியுடன் திருமணத்திற்கு வந்த மணமகன்


இன்ஸ்டாகிராமில் டாக்ஸ் டே அவுட் என்ற பக்கம் வெளியிட்ட இந்த வீடியோவில், தர்ஷன் நந்து போல் என்ற திருமண மாப்பிள்ளை, ஷெர்வானி திருமண உடையணிந்து, பைக்கில் தனது செல்லப் பிராணியுடன் திருமண அரங்கிற்குள் நுழைவதைக் காட்டுகிறது. விடியோவில், "செல்லபிராணியுடன் திருமணத்திற்கு வந்த மணமகன், நாம் வியந்து போய் பார்க்கிறோம்", என்று எழுதப்பட்டு இருந்தது. மேலும் "வெட்டிங் கோல்ஸ்?", என்று கேள்விக்குறியோடு எழுதப் பட்டு இருந்தது. 


தொடர்புடைய செய்திகள்: பிரிட்டனில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக ஆவணப்படம்: எதிர்ப்பை பதிவு செய்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!


வைரலான விடியோ


Dog லவ்வர்களால் பகிரப்படும் இந்த விடியோ, பலரால் லைக் செய்யப்பட்டு கமெண்ட்டும் செய்யப்படுகிறது. மணமகனின் இந்த அன்பான செயலை நெட்டிசன்கள் ரசித்துள்ளனர். பலர் வியந்து போய், "செல்லபிராணியை இப்படித்தான் வைத்துக்கொள்ள வேண்டும்", என்று கமெண்ட் செய்தனர். மற்றொரு பயனர், "ஆஹா, எல்லோரும் உங்களைப் போல இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் செல்லப்பிராணியை நன்றாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்." என்றார். 






வித்யாசமான திருமணங்கள்


பலர், "மணமகனை விட நாய் அழகாக இருக்கிறது" என்றனர். மற்றொருவர், "இது மிகவும் ஆரோக்கியமானது," என்றார். "ஆஹா அருமையான விலைமதிப்பற்ற நாய், தொடர்ந்து அன்புடன் இருங்கள்" என்று இன்னொரு பயனர் கருத்து தெரிவித்தார். இதற்கிடையில், மற்றொரு வைரல் வீடியோவில், ஒரு மணமகனும், மணமகளும் பலிபீடத்தின் மீது நிற்பதையும், பாதிரியார் தங்கள் திருமணத்தை நடத்துவதைக் காணலாம். இதுபோன்று திருமணம் நடக்கும் இடங்களில் வித்யாசமான சம்பவங்கள் நடைபெற்று பல விடியோக்களாக வெளியாகி வைரலாகி வருகின்றன.