உத்தரபிரதேசம் மாநிலத்தில் ப்ரதாப்கர் பகுதியில் வரதட்சணை கேட்ட மணமகனை மரத்தில் கட்டி வைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. 


கல்யாணமே வைபோகமே!


ப்ரதாப்கர் பகுதியில் அமர்ஜீத் வர்மா என்பவரின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஹர்காப்பூர் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. இருவருக்கும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கப்பட்டது. திருமண நாளும் வந்தது. ஆனால், திருமணம் நடப்பதற்கு கொஞ்சம் நேரத்திற்கு முன்பு மணமகன் மரத்தில் கட்டப்பட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. 


வரதட்சணை கேட்ட மணமகன்..






கல்யாண பொண்ணுக்கு மாலை மாற்றிய பிறகு, மணமகன் பெண் கும்பத்தாரிடன் வரதட்சணை கேட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் குடும்பத்தார் மணமகனை அருகில் இருந்த மரத்தில் கட்டி வைத்தனர். இரு வீட்டாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணமகன் மரத்தில் கட்டப்பட்டிருந்தார். இந்த தகவல் மந்தட்டா காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மணமகனை விடுவித்து அவரை கைது செய்தனர். ”அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


இரு குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், இருவரும் சமரசத்திற்கு முன்வரவில்லை” என்று போலீசார் தெரிவித்தனர்.