புழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மேல் திருப்பதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டும் என்றால் கீழ்த்திருப்பதியில் உள்ள மூன்று முக்கிய ஸ்தலங்களை கடந்துதான் செல்ல வேண்டும். ஸ்ரீநிவாசமங்காபுரம், அலமேலு மங்காபுரம், கோவிந்தராஜா சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களை கடந்து தான் செல்ல வேண்டும். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த ஸ்தலங்களில் தரிசனம் செய்து விட்டுத்தான் பின் மேல் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசிப்பார்கள். இந்த முக்கிய திருத்தலங்களில் ஒன்றான கோவிந்தராஜா கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்நிலையில், கோவிந்த ராஜா கோயில் அருகே உள்ள கடையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இதற்கு  அருகே கோயிலின் தேர் நிறுத்தப்பட்டுள்ளதால் அதிகாரிகள் தேரை வேறு இடத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோயிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவிந்தராஜா சுவாமி கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  கி.பி 1130 ஆம் ஆண்டு புனித ராமானுஜாச்சாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது . இக்கோயில் திருப்பதியில் உள்ள பழமையான கட்டடங்களில் ஒன்று.  திருப்பதி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய கோயில் வளாகங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இந்தக் கோயிலைச் சுற்றி திருப்பதி நகரம் கட்டப்பட்டுள்ளது. கோவிந்தராஜா சுவாமி கோயில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயில் வளாகத்திற்குள் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டமைப்புகள் உள்ளன.


கோவிந்தராஜா சுவாமி கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் 50 மீ உயரம், ஏழு மாடி ராஜகோபுரம் உள்ளூர் தலைவரான மட்லா அனந்தராஜாவால் கட்டப்பட்டது. இந்த அமைப்பில் ராமாயண காட்சிகள் மற்றும் மட்லா அனந்தராஜா மற்றும் அவரது மூன்று மனைவிகளின் உருவப்படம் பாதை சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும். ராஜகோபுரத்தின் மேற்கே, கோவிலின் இரண்டு சுற்றுச்சுவர்களும் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிப்புற பிராகாரத்தில் புண்டரிகாவல்லி மற்றும் ஆழ்வார்களின் துணை சன்னதிகள் இருக்கின்றன. உட்புறச் சுற்றில் கோவிந்தராஜரின் பிரதான சன்னதியும், கிருஷ்ணரின் சன்னதிகளும் அவரது துணைவிகளான ஆண்டாள் சன்னதிகளும் உள்ளன. 


மேலும் படிக்க


Senthil Balaji: ஐ.சி.யு.வில் செந்தில்பாலாஜி.. விரைவில் அறுவை சிகிச்சை -மருத்துவமனை அறிவிப்பு


EPS: ’மாட்டிவிடுவோம் என்ற பயம்.. ஆ.ராசா, கனிமொழி கைதில் கூட ஆர்ப்பாட்டம் இல்லை’- எடப்பாடி பழனிசாமி