திருமணம் என்றாலே மகிழ்ச்சியும், சந்தோஷமும் வீடுகளுக்குள் நிறைந்து விடும். திருமணம் நடைபெறும் தினத்தில் மணமகன் குடும்பத்தினரும், மணமகள் குடும்பத்தினரும் ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். சமீபகாலமாக திருமணம் என்றால் வழக்கமான ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் கல்யாண வீடுகளில் களைகட்டி வருகிறது. குறிப்பாக, வட இந்தியாவில் திருமண நிகழ்ச்சிகள் என்றால் ஆட்டம், பாட்டத்திற்கு சொல்லவே தேவையில்லை.
மகன் நடனம்:
இந்த நிலையில், வட இந்தியாவில் நடைபெற்ற மகனின் திருமண நிகழ்ச்சியில் தந்தை நடனம் ஆடி அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மகனின் திருமணத்திற்காக நடனக்குழுவிடம் நடனப் பயிற்சி பெற்று தனது மகன் திருமணத்தில் நடனம் ஆடியுள்ளார்.
வைரல் வீடியோ:
இந்தியில் வெளியான “ஹே ஜவானி ஹாய் தீவானி..” என்ற படத்தில் இடம்பெற்ற பத்தேமீஸ் தில் என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். வாரிசு படத்தில் வரும் விஜய் போல கோட், சூட் அணிந்து திருமண நிகழ்ச்சியில் அனைவர் முன்பாகவும் ஆடி அசத்தியுள்ளார். இந்த திருமணத்திற்காக நடனம் கற்றுக்கொடுத்த நடனக்குழுவினர் தங்களது இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை இதுவரை 85 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
சமீபகாலமாக திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள், இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நடனம் ஆடி வருவது குடும்பத்திற்குள் நல்ல ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மகன் திருமணத்தில் நடனமாடிய தந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: மத்திய அரசு vs நீதித்துறை...உரசல் போக்கை தொடர்ந்து உயர் நீதிமன்றங்களுக்கு 9 நீதிபதிகள் பரிந்துரை..கொலீஜியம் முடிவு..!
மேலும் படிக்க: 3 பைக்...14 பேர்...சாகசம் செய்வதாக கூறி சிக்கலில் மாட்டிக்கொண்ட நபர்கள்...தட்டித்தூக்கிய போலீஸ்...!