உத்தரப் பிரதேசத்தில் தனது திருமண நாள் அன்று ஆடி கேப்ரியோலெட் காரில் ஓபன் ரூஃபைத் திறந்து ஆடியபடியும், கார்களில் தொங்கியபடியும் பயணித்த மணமகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு காவல் துறையினர் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


எல்லை மீறிய மணமகன், நண்பர்கள்


உத்தரப் பிரதேசம், முசாஃபர் நகரின் பரபரப்பான சாலையான முசாஃபர்னார் - ஹரித்துவார் சாலையில் இன்று திருமண நாளைக் கொண்டாடிய மணமகன் ஒருவர், தன் நண்பர்கள் குழுவுடன் காரில் அதகளம் செய்தபடி பயணித்துள்ளார்.


தன் ஆடி காரின் மேற்கூரையைத் திறந்து காற்று வாங்கியவாறு ஆடி செல்ஃபி எடுத்தபடி மணமகனும், அவரது நண்பர்கள் பிற கார்களில் கதவுகளுக்கு வெளியே தொங்கியபடியும் பயணித்து, பரபரப்பான இந்த சாலையில் சென்ற சக பயணிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளனர்.


ட்விட்ட்ரில் வீடியோவால் விரைந்த போலீஸ்


இந்நிலையில், இவர்களது செயலை வீடியோ எடுத்து அங்கித் குமார் எனும் ட்விட்டர்வாசி, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து, இந்த வீடியோ உள்ளூர் காவல் துறையினரின் கண்ணில் பட்டுள்ளது.


 






இதனையடுத்து உடனடியாக செயல்பட்ட காவல் துறையினர், மணமகன் மற்றும் அவரது நண்பர்களின் கார்களை மடக்கிப் பிடித்துள்ளனர். மொத்தம் 9 கார்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்ததோடு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.


திருமண நாள் அன்று பயணிகளை தொந்தரவு செய்து காவலர்களிடம் மாட்டிய மணமகன் மற்றும் அவரது நண்பர்களின் இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: 100 மணிநேர போராட்டம்...ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு...எப்படி நடந்தது? திக் திக் நிமிடங்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண