புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகையை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


புதிதாகப் பெறப்படும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டருக்கான டெபாசிட் தொகையினை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அதாவது இந்த கட்டண உயர்வு புதிதாகப் பெறப்படும் இணைப்புகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் அறிவிப்பு.


சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்புகளுக்கு இந்த கட்டண உயர்வுக்கு முன்னர், ரூபாய் 1450 ஆக இருந்தது. தற்போது ரூபாய் 2200 ஆக கட்டணத்தினை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு சிலிண்டர் மற்றும் இரண்டு சிலிண்டர் அதாவது கூடுதல் சிலிண்டர் பெறுபவர்களுக்கு என தனித்தனி கட்டணம் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போதும் அதற்கு ஏற்ற வகையில் கட்டணத்தினை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 


கட்டண உயர்வு


புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெற ஏற்கனவே இருந்த டெபாசிட்  கட்டணத் தொகை ரூபாய் 1450, தற்போது மத்திய அரசு புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெற உயர்த்தியுள்ள டெபாசிட் கட்டணத்தொகை  ரூபாய் 2200 ஆக உயர்த்தியுள்ளது. மேலும் புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதுடன் கூடுதல் சிலிண்டர் கேஸ் வாங்குபவர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட  டெபாசிட் தொகை ரூபாய் 2900 ஆக இருந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு சிலிண்டர் கேஸ் இணைப்பு பெறுவதுடன் கூடுதல் சிலிண்டர் கேஸ் வாங்குபவர்களுக்கு ரூபாய் 4600 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கு முன்னர் 2012ம் ஆண்டு புதிய சமயல் எரிவாயு கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான கட்டணத்தினை அன்றைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. இதனை அன்றைக்கு எதிர்க் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி மிகவும் கடுமையாக எதிர்த்தது. ஆனால் தற்போது மத்திய ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மீது ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு பெரும் எதிர்ப்பை பலதரப்பிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெபாசிட் தொகையினை உயர்த்தியுள்ளது பெரும் அரசியல் நிகழ்வாக இருக்கும் என கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண